ஆட்டோமேட்டிக் ஆரியா காரை களமிறக்க டாடா திட்டம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஆட்டோமேட்டிக் ஆரியா காரை அறிமுகப்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமின்றி ஆரியா புதுப்பொலிவுடனும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புதிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் வருகிறது.

உட்புறத்தில் பெஞ்ச் இருக்கைகளுக்கு பதிலாக கேப்டன் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. டாடா ஆரியாவின் டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக மாடலாக இருக்கும்.
ஆரியாவில் 2.2 லிட்டர் டைகோர் டீசல் எஞ்சின் செயலாற்றுகிறது. இந்த எஞ்சின் 138 பிஎச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். ஆரியாவுக்கான 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








