டாடா ஸினான் டஃப் டிரக் கான்செப்ட்... ஒரு படி மேலே...

ஆஸ்திரேலியாவில் ஸினான் பிக்கப் டிரக் மாடலை அக்டோபர் முதல் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டாடா மோட்டார்ஸ். அதற்கு முன்னதாக இந்த பிக்கப் டிரக்கை ஆஸ்திரேலியர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஸினான் பிக்கப் டிரக்கின் டஃப் டிரக் என்ற கான்செப்ட்டை டாடா வெளியிட்டிருக்கிறது.

வார இறுதியான இன்றும், நாளையும் மெல்போர்ன் நகரில் நடைபெறும் தேசிய 4*4 மற்றும் அவுட்டோர் ஷோ மற்றும் மீன்பிடி மற்றும் படகு கண்காட்சியில் இந்த கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும் என்று கூறும் அளவுக்கான அம்சங்களை கொண்டிருக்கும் ஸினான் பிக்கப் டிரக் கான்செப்ட்டின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 கான்செப்ட் உருவாக்கம்

கான்செப்ட் உருவாக்கம்

டாடா மோட்டார்ஸின் ஆஸ்திரேலிய வினியோகஸ்தரான ஃபியஷன் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும், டாடா மோட்டார்ஸும் இணைந்து இந்த கான்செப்ட்டை உருவாக்கியுள்ளன. இந்த கான்செப்ட்டுக்கு வால்கின்ஷா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைமை டிசைனர் ஜூலியன் குயின்ஸி தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹோல்டன் பெர்ஃபார்மென்ஸ் வெகிக்கிள்ஸ் தலைமை டிசைனரும் இவர்தான். அவரது ஆக்கத்தில் உருவான இந்த கான்செப்ட் எப்படி இருக்கிறது?.

 பாடி கிட்

பாடி கிட்

ஸினானின் உருவத்தை பல படிகள் உயர்த்திப் பிடிக்கும் வகையிலான பிரத்யேக ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ரூஃப் லைட்டுகள், எல்இடி ஸினான் ஸ்பாட் லைட்டுகள், பகல் நேர ரன்னிங் விளக்குகள் என அலங்காரமாக காட்சி தருகிறது நம்ம ஸினான். இவை அனைத்தும் நர்வா என்ற பிரபல நிறுவனத்தின் தயாரிப்புகள்.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

20 இஞ்ச் பில்லட் அலுமினிய சக்கரங்கள், ஆஃப் ரோடு பயணங்களுக்கான பிரத்யேக டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர ஆர்டன் பெயின்ட் பூசப்பட்டிருப்பது ஸினானுக்கு கூடுதல் மெருகு.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பிக்கப் டிரக் கான்செப்ட்டில் 2.2 லிட்டர் டைகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. யூரோ 5 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட இந்த எஞ்சின் 148 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைந்து செயல்புரியும்.

 ஷிப்ட் ஆன் ஃப்ளை

ஷிப்ட் ஆன் ஃப்ளை

சாலை நிலைகளுக்கு ஏற்ப 2 வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துக்கு மாற்றிக் கொள்ளும் வகையிலான ஷிப்ட் ஆன் ப்ளை ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பமும் உண்டு.

More from DriveSpark

Article Published On: Saturday, August 24, 2013, 12:39 [IST]
English summary
Tata Xenon pickup truck is scheduled to be launched in Australia in October, but before that is done the company needed to ensure people Down Under took to Tata Motors' trucks. It was important to create an aura of toughness around the Xenon truck.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+