பார்வையாளர்கள் முன்னிலையில் முதல்முறையாக பறந்த டிரான்சிஷன்

உலகின் முதல் உற்பத்தி நிலை பறக்கும் காராக கருதப்படும் டிரான்சிஷன் கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த ஏர் ஷோவில் பொதுமக்கள் முன்னிலையில் பறக்கவிடப்பட்டது. டிரான்சிஷன் பறந்ததையடுத்து, கண்ட பார்வையாளர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

விஸ்கன்சின் அருகே ஆஸ்கோஷ் என்ற இடத்தில் நடந்த வருடாந்திர விமானக் கண்காட்சியில் பார்வையாளர்கள் முன்னிலையில் 10 நிமிடங்கள் டிரான்சிஷன் பறந்தது. டிரான்சிஷன் பற்றிய கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காணலாம்.

வேகம்

வேகம்

டிரான்சிஷன் கார் தரையில் அதிகபட்சமாக 110 கிமீ வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 177 கிமீ வேகத்திலும் பறக்கும்.

எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

இதில், 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க பொருத்தப்பட்டிருக்கிறது.

எரிபொருள் செலவு

எரிபொருள் செலவு

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ச்சியாக 4 மணிநேரம் பறக்க முடியும். ஒரு மணிநேரம் பறப்பதற்கு 19 லிட்டர் எரிபொருள் செலவாகும்.

மைலேஜ்

மைலேஜ்

தரையில் செல்லும்போது ஒரு லிட்டருக்கு 15 தூரம் வரை செல்லும் என்று டெர்ராபியூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்தது 800 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்ல முடியும்.

டிரைவிங் பயிற்சி

டிரைவிங் பயிற்சி

புக்கிங் செய்துள்ளவர்கள் டிரான்சிஷன் காரை 20 மணிநேரம் ஓட்டி பயற்சி பெற வேண்டும். மேலும், ஓட்டுனர் தேர்விலும் வெற்றி பெற்றால்தான் கார் டெலிவிரி கொடுக்கப்படும்.

விலை

விலை

கடந்த ஆண்டு முன்பதிவு துவங்கிய இந்த பறக்கும் காருக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெலிவிரி

டெலிவிரி

2015 முதல் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

இந்த காரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் டிஎஃப் எக்ஸ் என்ற புதிய ஹைபிரிட் எலக்ட்ரிக் காரை டெராஃபியூஜியா வடிவமைத்து வருகிறது. இது வர்த்தக அறிமுகத்துக்கு 12 ஆண்டுகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2013, 13:01 [IST]
English summary
Earlier this week visitors to the EAA AirVenture airshow in Oshkosh, Wisconsin, USA witnessed an event which will go down in history as the first successful public flight of a modern day, fully functional flying car. That car is the Terrafugia Transition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+