ஆகஸ்ட் விற்பனையில் டாப்- 10 கார்களின் பட்டியல்!!

By Saravana

பொருளாதார சுணக்க நிலை, ரூபாய் மதிப்பு சரிவு, எரிபொருள் விலை உயர்வு ஆகியவை கார் மார்க்கெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களும் திட்டத்தை ஒத்திப்போடும் போக்கு அதிகரித்து வருகிறது.

இதனால், கடந்த ஆகஸ்ட்டிலும் கார் விற்பனை மந்த கதியில் இருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், எந்தெந்த கார்கள் மார்க்கெட்டில் டாப் - 10 இடத்தை பெற்றன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 17,124 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

சலுகைகள் மற்றும் இதர ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் ஸ்விஃப்ட் விற்பனையை தற்காத்து வருகிறது மாருதி. கடந்த மாதம் 14,152 ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்தது. கடந்த ஆகஸ்ட் விற்பனையில் நாட்டின் இரண்டாவது அதிகம் விற்பனையான கார் ஸ்விஃப்ட்தான்.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

கடந்த மாதம் மூன்றாவது இடத்தை பெற்றது டிசையர். அமேஸ் வருகையால் சிறிது நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது டிசையர். கடந்த மாதம் 13,723 டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளது.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர் தொடர்ந்து 4ம் இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் 12,748 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்தது.

 ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஆல்ட்டோவின் போட்டியாளரான ஹூண்டாய் இயான் 5ம் இடத்தை பெற்றது. கடந்த மாதம் 7,991 இயான் கார்கள் விற்பனையாகி ஹூண்டாய்க்கு பலம் சேர்த்தது.

பொலிரோ

பொலிரோ

பல்வேறு சவால்களுக்கு இடையில் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி கடந்த மாத பட்டியலில் 6ம் இடத்தை பெற்றது. கடந்த மாதம் 7,030 பொலிரோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்தது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

டாப் 10 பட்டியலில் அமேஸ் நிரந்தர இடம் போட்டுக் கொண்டுவிட்டது. கடந்த மாதம் 6,242 அமேஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

கடந்த மாதம் ஹூண்டாய் ஐ10க்கு 8வது இடம் கிடைத்தது. ஆகஸ்ட்டில் 6,017 ஐ10 கார்கள் விற்பனையானது. கிராண்ட் ஐ10 வருகையால் தனது இடத்தை ஐ10 தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை அடுத்தடுத்த மாதங்களில் பார்க்கலாம்.

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20 காருக்கு கடந்த மாதம் 9வது இடம் கிடைத்தது. ஆகஸ்ட்டில் 5,695 ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

ஈக்கோஸ்போர்ட்

ஈக்கோஸ்போர்ட்

இரு மாதங்களாக தொடர்ந்து ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி டாப் 10 பட்டியலுக்குள் இடம் பெற்று வருகிறது. கடந்த மாதம் 5,372 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனையாகியுள்ளன.

பட்டியலில் மாற்றம்?

பட்டியலில் மாற்றம்?

மாருதி ஸ்டிங்ரே மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய இரண்டு முக்கிய கார்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அடுத்த மாத டாப் 10 பட்டியலில் மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2013, 11:07 [IST]
English summary
Here is the top 10 list of cars sold in India during the month of August 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+