ஸ்கோடா ஆக்டாவியாவை வாங்குவதற்கு 10 முக்கிய காரணங்கள்!!
வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெற்ற ஸ்கோடா ஆக்டாவியா பெரும் எதிர்பார்ப்புடன் இந்திய மார்க்கெட்டில் மீண்டும் அடியெடுத்து வைத்துவிட்டது. கடந்த 3ந் தேதி அறிமுக தினத்தன்று நிலவரப்படி 500 பேர் புதிய ஆக்டாவியாவுக்கு முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேம்பட்ட டிசைன், கூடுதல் வசதிகளுடன் புத்தம் புதிய காராக வந்திருக்கும் புதிய ஆக்டாவியா போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என ஸ்கோடா நம்புகிறது. இந்த நிலையில், ஸ்கோடா ஆக்டாவியாவை வாங்குவதற்கான 10 முக்கிய காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹெட்லைட்
அழகாக டிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட் அறைக்குள் பை ஸினான் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளும் உண்டு.

கண்ணாடி கூரை
எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய பானரோமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கூரை சூரிய வெப்பத்தை வெகுவாக தடுக்கும் நுட்பம் கொண்டது.

காற்றுப் பைகள்
இந்த காரில் 6 உயிர் காக்கும் காற்றுப் பைகள் பொருத்தப்பட்டுள்ளன. காருக்குள் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பை தரும் விதத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

சீட் அட்ஜெஸ்ட்மென்ட்
எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. 12 விதமாக மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டது. அத்துடன், மூன்று பேருக்கு ஏற்ற வகையில் இருக்கை அமைப்பை மாற்றிக் கொள்ளும் மெமரி பங்ஷனும் உள்ளது.

டயர் பிரஷர் மானிட்டர்
டயர்களில் காற்றின் அழுத்தத்தை டிரைவருக்கு எச்சரிக்கும் வகையிலான பிரஷர் மானிட்டர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, பஞ்சர் உள்ளிட்ட அவசர சமயங்களில் இந்த வசதி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்
எலக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளதால் நெருக்கடி சமயங்களில் காரை சறுக்காமலும், சக்கரங்கள் லாக் ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளும். இது மிக முக்கியமான பாதுகாப்பு வசதியாக கூறலாம்.

டூவல் ஸோன் ஏசி
பயணிகள் தங்களுக்கு தேவையான அளவு ஏசியை கூட்டிக் குறைத்துக் கொள்வதற்கு வசதியாக டூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி இருக்கிறது. மேலும், பின்புற பயணிகளுக்கான ஏசி வென்ட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உண்டு.

ஆட்டோமேட்டிக் வைப்பர்
மழை வந்தால் சென்சார் உதவியுடன் உணர்ந்து செயல்படும் ஆட்டோமேட்டிக் வைப்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, வெளிச்சத்தை பொறுத்து தானியங்கி முறையில் ஒளிரும் ஹெட்லைட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
5.8 இஞ்ச் டிஎஃப்டி கலர் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. எஸ்டி கார்டு, யுஎஸ்பி போர்ட் ஆக்ஸ் மற்றும் புளூடூத் தொடர்பு வசதிகள் உள்ளன. 8 ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பார்க்ட்ரோனிக் சென்சார்
பார்க்கிங் செய்வதற்கு மிகுந்த உறுதுணயாக பார்க்ட்ரோனிக் சென்சார் சிஸ்டம் உள்ளது. காரை சுற்றிலும் போதுமான இடவசதி உள்ளதா என்பதையும், காரை நகர்த்தும்போது முன்புறம், பின்புறத்தில் போதிய இடவசதி இருக்கிறதா என்பதை ஒலி எழுப்பி எச்சரிக்கும் சிஸ்டம் உள்ளது. தவிர, இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரையிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








