உலகின் மகா மட்டமான கார் பட்டியலில் டாடா இண்டிகாவுக்கு இடம்

By Saravana

கடந்த 25 ஆண்டுகளில் உலகின் மோசமான கார் மாடல்கள் குறித்து ஆட்டோ எக்ஸ்பிரஸ் இணையம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா இன்டிகாவின் ரீபேட்ஜ் மாடலான சிட்டி ரோவரும் இடம் பிடித்துள்ளது.

தோற்றம், ஓட்டுதல் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், டாப் 10 லிஸ்ட்டில் இடம் பிடித்த கார் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரோவர் சிட்டி ரோவர்

ரோவர் சிட்டி ரோவர்

2003ல் எம்ஜி ரோவர் நிறுவனம் டாடா இண்டிகாவை சிட்டி ரோவர் என்ற பெயரில் இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆனால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் போனியாகவில்லை. இங்கிலாந்து சாலை நிலைகளுக்கு ஏற்ப சில மாறுதல்கள் செய்து இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்து அனுப்பப்பட்டது. அதிக விலை, தரமின்மை என்று பெயர் வாங்கியதால், விற்பனையில் பின்தங்கியது. 2005ம் ஆண்டு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு கடும் விமர்சனத்திற்கு உள்ளான கார்களில் இதுவும் ஒன்று.

டைஹட்சூ மூவ்

டைஹட்சூ மூவ்

1997ல் இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தோற்றத்தில் படு மோசமாக வர்ணிக்கப்பட்ட கார் மாடல். கடந்த 25 ஆண்டுகாலத்தில் மிக மோசமாக பெயரெடுத்த கார் மாடலில் இதுவும் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 மிட்சுபிஷி கரிஸ்மா

மிட்சுபிஷி கரிஸ்மா

1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த கார் ஃபோர்டு மாண்டியோ அளவுக்கு பெரிய ஹேட்ச்பேக் கார். நடைமுறைக்கு சிறந்ததாக இருந்தாலும், ஓட்டுதல் தரம், விலை, நம்பகத்தன்மையை பெறாமல் மார்க்கெட்டில் இருந்து விலகியதோடு, தற்போது இந்த லிஸ்ட்டிலும் இடம் பிடித்துள்ளது.

சுஸுகி எக்ஸ் - 90

சுஸுகி எக்ஸ் - 90

1995ல் வெளியிடப்பட்ட மாடல். 90களில் சுஸுகி நிறுவனம் விட்டாரா எஸ்யூவியை கையில் வைத்துக் கொண்டு பணக்கார மார்க்கெட்டுகளில் நல்ல மதிப்பை பெற்றிருந்தது. அதை கெடுத்துக் கொள்ளும் விதத்தில் எக்ஸ் 90 காரை அறிமுகம் செய்தது. 2 சீட்டர் மினி எஸ்யூவியாக கொண்டு வரப்பட்ட இது தோற்றத்தில் மிக அசிங்கமான கார் மாடலாக பெயர் பெற்றுவிட்டது.

 ரெனோ அவான்டைம்

ரெனோ அவான்டைம்

2001ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கூபே மற்றும் எம்பிவி டிசைன் கலந்து கட்டிய கார். இந்த ஆய்வை வெளியிட்டுள்ள இதே ஆட்டோ எக்ஸ்பிரஸ் இதழால் ஓட்டுவதற்கு சிறப்பான கார் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், சொகுசு கார் வாடிக்கையாளர்களை இந்த டிசைன் கவரவில்லை. விலையும் அதிகம் என்று வாடிக்கையாளர்களால் ஒதுக்கப்பட்ட இந்த கார் மாடலும் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது.

ஸ்கோடா எஸ்டெல்

ஸ்கோடா எஸ்டெல்

1988ல் வந்த இந்த கார் பழைய தொழில்நுட்பங்கள், மோசமான கையாளுமை போன்றவற்றால் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

லெக்சஸ் எஸ்சி 430

லெக்சஸ் எஸ்சி 430

2001ம் ஆண்டு வெளியிடப்பட்ட டொயோட்டா லெக்சஸ் பிராண்டின் எஸ்சி 430 தோற்றத்தில் அவ்வளவாக வாடிக்கையாளர்களை கவரவில்லை. குறிப்பாக, பின் இருக்கை வாடிக்கையாளர்களால் குறை சொல்லப்பட்ட விஷயம். ஓட்டுதல் தரத்திலும் சிறப்பாக இல்லாததால் ஒதுக்கப்பட்டுவிட்டது.

நிசான் செரீனா

நிசான் செரீனா

1992ல் வெளியிடப்பட்ட இந்த எம்பிவி கார் ஃபெர்ஃபார்மென்ஸ் மோசமாக இருந்ததால் முக்கிய இடத்தை பிடிக்காமல் பின்தங்கியது. இதில் பொருத்தப்பட்டிருந்த 2.3 லிட்டர் டீசல் எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 27.8 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரக்கு வாகனங்களைவிட மிக மோசமான பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருந்தது. இதுதவிர, என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் போதிய தர அந்தஸ்தை பெறவில்லை.

சிட்ரோவன் சி3 புளுரியல்

சிட்ரோவன் சி3 புளுரியல்

2003ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் கழற்றிக் கொள்ளும் வசதி கொண்ட கூரையுடன் வந்தது. ஆனால், அந்த கூரையை கழற்றுவதற்கு மிகுந்த சிரமம் இருந்ததுடன், மழை வரும்போது கசிவு பிரச்னைகளும் ஏற்பட்டது. மேலும், இன்டிரியர் பாகங்களின் தரம் மகாமட்டமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் புறந்தள்ளிவிட்டனர்.

 கிறிஸ்லர் பிடி குரூஸர் கன்வெர்ட்டிபிள்

கிறிஸ்லர் பிடி குரூஸர் கன்வெர்ட்டிபிள்

2005 ம் ஆண்டு கூரை நீக்கப்பட்டு வந்த இந்த குரூஸர் கன்வெர்ட்டிபிள் மாடல் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஓட்டுதல் தரம், வசதிகள் போன்றவற்றிலும் குறைபாடுகளுடன் மார்க்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2013, 10:31 [IST]
English summary
Auto Express magazine has released the list of top 10 worst cars over the last 25 years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+