ஏப்ரல் விற்பனையில் டாப்-20 கார்களின் லிஸ்ட்!

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் கார் மார்க்கெட் எதிர்பார்த்த அளவு எழுச்சி ஏற்படவில்லை. இருந்தாலும், வழக்கம்போல் மாருதி டாப்-20 பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. மேலும், கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் கார் நேராக டாப்-20 பட்டியலுக்குள் இடம்பிடித்துவிட்டது.

அதேவேளை, மாருதி ஆல்ட்டோ மற்றும் டொயோட்டா இன்னோவா கார்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. செவர்லே என்ஜாய் எம்பிவி காருக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க துவங்கியுள்ளதன் எதிரொலியாக இன்னோவா விற்பனை சரிவு கண்டிருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர். கடந்த மாதம் விற்பனையில் டாப்-20 பட்டியலில் இடம் பிடித்த கார்களின் வரிசையை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் 27,356 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 19.847 ஆல்ட்டோ கார்கள் மட்டுமே விற்பனையானது. இது மாருதியின் மொத்த விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

அமேஸ் வருகை டிசையரை அதிகம் பாதிக்கவில்லை என்பது அதன் விற்பனையை வைத்தே தெரிகிறது. கடந்த மார்ச்சில் 20,078 டிசையர் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 19,446 டிசையர் கார்கள் விற்பனையானது.

மாருதி ஸ்விப்ட்

மாருதி ஸ்விப்ட்

மாருதி ஸ்விப்ட் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் 19,654 ஸ்விப்ட் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 16,531 ஸ்விப்ட் கார்கள் மட்டுமே விற்பனையானது. இருந்தாலும், மூன்றாம் இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

 மாருதி வேகன்-ஆர்

மாருதி வேகன்-ஆர்

கடந்த மாதம் 12,794 வேகன்-ஆர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து 4ம் இடத்தை வேகன்-ஆர் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ

மாருதியின் தயாரிப்புகளுக்கு அடுத்த இடத்தை மஹிந்திராவின் பொலிரோ பிடித்துள்ளது. கடந்த மாதம் 9,766 பொலிரோ எஸ்யூவி கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

மாருதி ஆல்ட்டோவுக்கு போட்டியாக பார்க்கப்படும் ஹூண்டாய் இயான், ஐ10 காரை பின்னுக்குத்தள்ளி ஒரு இடம் முன்னேறி 6ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் 8,350 இயான் கார்கள் விற்பனையாகியுள்ளது.

 ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

கடந்த மாதம் 8,194 ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. டாப்-10ல் ஐ10க்கு 7ம் இடம்.

 ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

கடந்த மாத நிலவரப்படி 9ம் இடத்தில் இருந்த ஹூண்டாய் ஐ20 கார் ஒரு இடம் முன்னேறி 8ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் 6,230 ஐ20 கார்கள் விற்பனையானது.

டாடா இன்டிகா

டாடா இன்டிகா

கடந்த மாதம் 5,943 இன்டிகா கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால், 13 வது இடத்திலிருந்து கடந்த மாதம் 9ம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் தொடர்ந்து டாப்-10 பட்டியலுக்குள் இருக்கிறது. கடந்த மாதம் 5,362 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. தனது 10வது இடத்தை கடந்த மாதமும் தக்கவைத்துள்ளது டஸ்ட்டர்.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா எம்பிவி காரின் விற்பனையில் சிறிது சரிவு ஏற்பட்டது. கடந்த மாதம் 5,168 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்தது.

மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி

கடந்த மாதம் 4,874 ஓம்னி கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், 12வது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது ஓம்னி.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா அமேஸ் முதல் மாதத்திலேயே 4,852 என்ற பெரும் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து டாப்-20 பட்டியலில் 13ம் இடத்தை பிடித்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் டாப்-10 பட்டியலுக்குள் அமேஸ் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

மிட்சைஸ் செக்மென்ட்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் ஹூண்டாய் வெர்னாவின் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த மாதம் 4,809 வெர்னா கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம், 17வது இடத்திலிருந்து 14வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

கடந்த மாதம் 4,433 ரிட்ஸ் கார்களை மாருதி விற்பனை செய்தது. ஒருபடி கீழே இறங்கி 15வது இடத்தில் இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

டஸ்ட்டர் வரவால் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் விற்பனையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 4,437 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்களை மஹிந்திரா விற்பனை செய்தது.

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ

கடந்த மார்ச் நிலவரப்படி 19வது இடத்திலிருந்த ஹூண்டாய் சான்ட்ரோ கடந்த மாத விற்பனை மூலம் 17வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கடந்த மாதம் 4,264 சான்ட்ரோ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

மாருதி ஈக்கோ

மாருதி ஈக்கோ

கடந்த மாதம் 3,822 ஈக்கோ கார்களை மாருதி விற்பனை செய்தது. மேலும், 20வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

 ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

18ம் இடத்திலிருந்து 19வது இடத்துக்கு கீழே இறக்கப்பட்டுள்ளது ஃபோர்டு ஃபிகோ. கடந்த மாதம் 3,822 ஃபிகோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

மார்ச் நிலவரப்படி 8வது இடத்தில் இருந்த டொயோட்டா இன்னோவா ஏப்ரல் விற்பனை நிலவரப்படி தடாலடியாக 20இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மார்ச்சில் 8,422 இன்னோவா கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 3,192 இன்னோவா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 கார் விற்பனை

கார் விற்பனை

மாருதி, ஹூண்டாய் என அனைத்து நிறுவனங்களின் விற்பனையிலுமே தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. அமேஸ் வருகை மூலம் டாப்-20 பட்டியலில் ஹோண்டாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. மேலும், இன்னோவாவின் விற்பனையில் ஏற்பட்டிருக்கும் பெரும் சரிவு டொயோட்டாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து புதிய கார் மாடல்களின் வரவால் அடுத்து வரும் மாதங்களின் விற்பனை பட்டியலில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2013, 13:26 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+