விற்பனையில் டாப்-20 கார்களின் லிஸ்ட்
பல காரணங்களால் கார் மார்க்கெட் படு வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த நிதி ஆண்டு முடிவில் விற்பனையை அதிகரிக்கும் விதமாக மாருதி உள்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்கின. இதற்கு கைமேல் பலன் கிட்டியதா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தொடர்ந்து சில கார் மாடல்கள் விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.
கடந்த மாத விற்பனை பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்த கார் மாடல்களை இந்த தொகுப்பில் விபரங்களுடன் காணலாம். இது கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் ஒரு ஒப்பீடு செய்ய உதவும் என நம்புகிறோம். இந்த மாதம் ஹோண்டா அமேஸ் வருகையால் வரும் மாதங்களில் விற்பனை பட்டியலில் நிச்சயம் பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம். மார்ச் மாத விற்பனை பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ 800
மாருதிக்கு பெரும் பங்களிப்பை ஆல்ட்டோ கார்கள் வழங்கி வருகின்றன. கடந்த மாதம் சந்தை மந்தமாக இருந்தாலும் மொத்தம் 27,356 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. வாடிக்கையாளர்களின் மனதில் முதலிடம் பிடித்த ஆல்ட்டோவுக்கு விற்பனை பட்டியிலும் முதலிடம்தான்.

மாருதி டிசையர்
கடந்த மாதம் 20,078 டிசையர் செடான் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இந்த மாதம் அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டால் அது நிச்சயம் டிசையருக்கு நேரடி நெருக்கடியை தரும் என கூறலாம். கடந்த மாதம் இரண்டாம் இடத்தில் உள்ள டிசையர் அடுத்து வரும் மாதங்களில் இதே இடத்தை தக்கவைக்குமா, பொறுத்திருந்து பார்ப்போம்.

மாருதி ஸ்விப்ட்
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை போற்றி வரும் ஸ்விப்ட் கடந்த மாத விற்பனை பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் 19,654 ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

மாருதி வேகன் ஆர்
முதல் நான்கு இடங்களும் மாருதியின் தயாரிப்புகளுக்கே. கடந்த மாத விற்பனை பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது வேகன்-ஆர். மார்ச்சில் 14,681 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

மஹிந்திரா பொலிரோ
மினி எஸ்யூவி, ரியல் எஸ்யூவி என மார்க்கெட்டில் புதிய புதிய மாடல்கள் அறிமுகமானாலும், மஹிந்திரா பொலிரோவின் விற்பனையை எந்தவொரு மாடலும் அசைத்து பார்க்க முடியவில்லை. மார்ச் விற்பனை பட்டியலில் மஹிந்திரா பொலிரோவுக்கு 5ம் இடம். கடந்த மாதம் 11,675 பொலிரோ எஸ்யூவி கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. கார் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரிப்புகளுக்கு டாப்-5 பட்டியலில் இடமில்லை.

ஹூண்டாய் ஐ10
சிறந்த ஹேட்ச்பேக் காராக பெயர் வாங்கியிருக்கும் ஹூண்டாய் ஐ10க்கு 6மம் இடம் கிடைத்தது. கடந்த மாதம் 8,686 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் இயான்
ஆல்ட்டோவுக்கு நேரடி போட்டியாளராக கருதப்படும் இயானுக்கு கடந்த மாத பட்டியலில் 7ம் இடம் கிடைத்துள்ளது. கடந்த மாதம் 8,604 இயான் கார்கள் விற்பனையாகியது.

டொயோட்டா இன்னோவா
டொயோட்டா இன்னோவா டாப்-10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. கடந்த மாதம் 8,422 இன்னோவா எம்பிவி கார்கள் விற்பனையானது.

ஹூண்டாய் ஐ20
கடந்த மாதம் விற்பனை பட்டியலில் 9ம் இடத்தை பிடித்தது ஹூண்டாய் ஐ20 கார். கடந்த மாதம் 6,988 ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்தது.

ரெனோ டஸ்ட்டர்
மார்க்கெட்டில் கலக்கி வரும் ரெனோ டஸ்ட்டர் குறுகிய காலத்தில் டாப்-10 பட்டியலுக்குள் வந்துவிட்டது. கடந்த மாதம் ரெனோ டஸ்ட்டர் 10ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 6,313 டஸ்ட்டர் கார்கள் விற்பனையாகியது.

மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா எம்பிவி கார் 11ம் இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 6,200 எர்டிகா கார்கள் விற்பனையானதாக மாருதி தெரிவித்துள்ளது.

மாருதி ஓம்னி
கடந்த மாதம் 5,755 ஓம்னி கார்களை மாருதி விற்பனை செய்தது. மாருதி ஓம்னி 12ம் இடத்தை பெற்றது.

இன்டிகா+ விஸ்டா
கடந்த மாதம் 5,304 இன்டிகா கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது. இன்டிகா வரிசைக்கு விற்பனை பட்டியலில் 13ம் இடத்தை பெற்றது.

மாருதி ரிட்ஸ்
கடந்த மாதம் 4,890 ரிட்ஸ் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. ரிட்ஸ் காருக்கு 14ம் இடம் கிடைத்தது.

டொயோட்டா எட்டியோஸ்
கடந்த மாதம் 4,742 எட்டியோஸ் கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. விற்பனை பட்டியலில் எட்டியோசுக்கு 15வது இடம் கிடைத்தது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
கடந்த மாதம் 4,658 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

ஹூண்டாய் வெர்னா
மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் முன்னிலை வகிக்கும் ஹூண்டாய் வெர்னாவுக்கு பட்டியலில் 17வது இடம் கிடைத்தது. கடந்த மாதம் 4,589 வெர்னா கார்கள் விற்பனையாகியுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ
டாப்-20 பட்டியலில் ஃபோர்டு ஃபிகோவுக்கு 18ம் இடத்தை பெற்றது. கடந்த மாதம் 4,381 ஃபிகோ கார்கள் விற்பனையாகியது.

ஹூண்டாய் சான்ட்ரோ
மார்க்கெட்டில் தனக்கென தனி மதிப்பை தக்க வைத்து வருகிறது ஹூண்டாய் சான்ட்ரோ. கடந்த மாதம் 4,080 சான்ட்ரோ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. பட்டியலில் சான்ட்ரோவுக்கு 19வது இடம்.

மாருதி ஈக்கோ
குறைந்த விலையில் கிடைக்கும் 7 சீட்டர் காரான ஈக்கோவுக்கு பட்டியலில் 20வது இடம். கடந்த மாதம் 3,931 ஈக்கோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

கார் விற்பனை
செவர்லே, ஃபோக்ஸ்வேகன், நிசான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் ஒரு கார் மாடல் கூட டாப்-20 பட்டியலுக்குள் வரவில்லை. இருப்பினும், கடந்த நிதி ஆண்டு முடிவு மாதமான மார்ச்சில் விற்பனை 13.79 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளை, முந்தைய நிதியாண்டுடன் கடந்த நிதி ஆண்டு விற்பனையை ஒப்பிடுகையில் 13.5 சதவீதம் வீழ்ச்சியைடந்துள்ளது. இந்த நிலையில் உலக பொருளாதாரத்தில் தற்போது முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுவதால் அடுத்து வரும் மாதங்களில் கார் மார்க்கெட் மீண்டும் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








