இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய கார் மாடல்கள்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய கார் மார்க்கெட்டில் ஒரு சில கார்கள் மட்டுமே பிரபல்யமாக இருந்தன. இப்போது இருக்கும் அளவுக்கு மாடல்கள் கிடையாது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

உங்களது ரசனை, பட்ஜெட், வசதிகள், எதிர்பார்ப்புக்கு தக்கவாறு மாடல்கள் குவிந்து கிடக்கின்றன. தவிர, வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் கவர்ந்துவிடும் நோக்கிலும் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், வெளிநாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் சில கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் வரவேற்பு பெறும் என்ற நிலை இருக்கிறது. அதுபோன்ற மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹோண்டா என்- ஒன்

ஹோண்டா என்- ஒன்

ஹோண்டாவின் மினி ஹேட்ச்பேக் கார்தான் என்-ஒன். சமீபத்தில் ஜப்பான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரியோவைவிட சின்ன காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என்று ஹோண்டா கூறிவிட்டது. இருப்பினும், பிரியோவைவிட குறைவான விலையில் இந்த காரை இறக்கினால், நிச்சயம் ஹோண்டாவுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

ஹோண்டா என்- ஒன்

ஹோண்டா என்- ஒன்

டால் பாய் கான்செப்ட் மாடல் என்பதால் ஹெட்ரூம் அதிகம். இந்த காரில் 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பிரியோவின் 1.2 லிட்டர் எஞ்சினை பொருத்தும் வாய்பப்பும் இருக்கிறது. 660சிசி எஞ்சின் மாடல் லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3.5 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர முடியும். எதிர்காலத்தில் இந்தியாவில் ஹோண்டாவுக்கு தேவையான கார் மாடல் இது என்று ஆணித்தரமாக கூறலாம்.

ஸ்கோடா சிட்டிகோ

ஸ்கோடா சிட்டிகோ

விற்பனையில் பின்தங்கி நிற்கும் ஸ்கோடா ஆட்டோவுக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய மாடல். ஆனால், இந்த காரை இந்தியாவில் உடனடியாக அறிமுகம் செய்யும் வாய்ப்பு இல்லை என ஸ்கோடாவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துவிட்டது. இந்த காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இறக்க ஸ்கோடாவிடம் தற்போது வாய்ப்பு உள்ளது.

ஸ்கோடா சிட்டிகோ

ஸ்கோடா சிட்டிகோ

நகர்ப்புறத்துக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட இந்த காரை ஸ்கோடா விற்பனைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும். ஏனெனில், ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்பதால் ஸ்கோடாவுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் நிச்சயம் கைகொடுத்து உதவுவர் என்பதை மறுக்க இயலாது.

 ஃபியட் பாண்டா

ஃபியட் பாண்டா

தனியாக கடை விரித்துவிட்ட ஃபியட் நிறுவனம் புதிய புன்ட்டோ, லீனியாவை தவிர அடுத்தடுத்து புதிய மாடல்களை இறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, பெரும் முதலீடு செய்துள்ள டீலர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவும் புதிய மாடல்கள் கட்டாயம். தற்போது ஃபியட் நிறுவனம் பாண்டா காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.

ஃபியட் பாண்டா

ஃபியட் பாண்டா

ஐரோப்பாவில் வெற்றி பெற்ற இந்த கார் சிறந்த டிசைன், மனதுக்கு இதமான இன்டிரியர் கொண்டது. புன்ட்டோவுக்கு துணையாக இது நிலைநிறுத்தப்படும். டிசைனில் வேறுபட்டாலும், அம்சங்கள் மற்றும் விலையில் மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியை கொடுக்கும். ஐரோப்பாவில் 6 விதமான எஞ்சின்களுடனும், 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் புன்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்களுடன் வரும். ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகி ஏபிவி

சுஸுகி ஏபிவி

மாருதி நிறுவனம் எர்டிகா மூலம் எம்பிவி மார்க்கெட்டில் வலுவான அடித்தளத்தை போட்டுவிட்டது. எர்டிகா 7 சீட்டர் காராக இருந்தாலும், இடவசதியில் சிறிது குறை இருக்கிறது. இடவசதியை எதிர்பார்க்கும் மாருதி ரசிகர்களுக்கு ஏற்ற புதிய எம்பிவியை களமிறக்கினால், எம்பிவி மார்க்கெட்டை இன்னும் மாருதி வலுப்படுத்திக் கொள்ள முடியும். அந்த விதத்தில், மாருதி தாய் நிறுவனம் சுஸுகி விற்பனை செய்து வரும் ஏபிவி எம்பிவி கார் சிறந்ததாக கூறலாம்.

சுஸுகி ஏபிவி

சுஸுகி ஏபிவி

சுஸுகி ஏபிவி கார் மஹிந்திரா ஸைலோ, நிசான் எவாலியா கார்களுக்கு நேரடி போட்டியாளராக கூறலாம். எஸ்எக்ஸ்-4 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்ய முடியும். ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் வற்பனைக்கு கொண்டு வர முடியும்.

மிட்சுபிஷி மிராஜ்

மிட்சுபிஷி மிராஜ்

இந்தியா சின்ன கார்களுக்கான மார்க்கெட் என்று தெரிந்தும் பெரிய பெரிய மாடல்களை வைத்து வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகிறது மிட்சுபிஷி. இந்த நிலையில், கடந்த ஆண்டு தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட மிராஜ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் மிட்சுபிஷி அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருக்கிறது.

மிட்சுபிஷி மிராஜ்

மிட்சுபிஷி மிராஜ்

மிராஜ் ஹேட்ச்பேக் காரில் 1.2 எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 77 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தற்போது மிராஜ் ஹேட்ச்பேக் கார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் தாய்லாந்து மார்க்கெட்டில் கிடைக்கிறது. இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் காருடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 31, 2013, 13:14 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+