நகர பயன்பாட்டுக்கான சிறந்த டாப் 5 கார்கள்!

அலுவலகம் அல்லது தொழில் சம்பந்தமாக நகரத்திற்குள் சிலருக்கு அதிக தூரம் தினசரி காரில் செல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்கு மைலேஜ் மற்றும் குறுகிய சாலைகளில் கூட எளிதாக செல்லும் கார்கள் சிறப்பானதாக இருக்கும்.

தவிர, எளிதாகவும், சிறிய இடத்திலும் பார்க்கிங் செய்ய ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அருமையான ஏசியுடன் கூடிய அதிக டர்போ லேக் இல்லாத கார்களாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும் பட்ஜெட் கார்கள் பற்றி விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800

மார்க்கெட்டில் கிடைக்கும் சிறந்த சிட்டி கார் ஆல்ட்டோ 800. தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த கார் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. டாப் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங், ஏசி ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், குறுகிய சாலைகளில் எளிதாக ஓட்ட முடியும் என்பதோடு, பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி வேரியண்ட் 30.46 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சிஎன்ஜி நிரப்பினால் 300 கிமீ வரை செல்லலாம். சென்னையில் ரூ.4.22 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. இதற்கு மாற்றாக ஹூண்டாய் இயான் காரை கூறலாம்.

மாருதி வேகன் ஆர் டூவோ

மாருதி வேகன் ஆர் டூவோ

நகர்ப்புறத்துக்கு ஏற்ற சிறந்த கார். எல்பிஜி, சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவுக்கு 30 கிமீ மைலேஜ் தரும். வெளிப்புறத்தை பார்த்து ஓட்டுவதற்கும், மென்மையான கிளட்சும் கொண்டிருப்பதால் இருபாலருக்கும் சிறந்த டிரைவிங் அனுபவத்தை கொடுக்கும். எல்பிஜி மாடல் லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜை வழங்கும். மாருதி வேகன் ஆருக்கு மாற்று மாடல் வேண்டும் என்போருக்கு ஹூண்டாய் ஐ10 எல்பிஜி மாடல் சிறந்ததாக இருக்கும். சென்னையில் வேகன் ஆர் டூவோ கார் ரூ.5.02 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

செவர்லே பீட் டீசல்

செவர்லே பீட் டீசல்

நகர்ப்புறம் மற்றும் நீண்ட தூர பயணங்கள் என இரண்டிற்கும் சிறந்த ஹேட்ச்பேக் கார். எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், குறைந்த டர்னிங் ரேடியஸ் கொண்டது என்பதால் ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கும். இந்தியாவில் விற்பனையாகும் அதிக மைலேஜ் கொடுக்கும் டீசல் கார்களில் ஒன்றாக திகழும் இந்த கால் லிட்டருக்கு 25.44 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக பீட் எல்பிஜி மாடலையும் கூறலாம். டீசல் மாடல் ரூ.5.85 லட்சம் ஆன்ரோடு விலையிலும், எல்பிஜி மாடல் ரூ.5.20 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ டீசல்

ஃபோர்டு ஃபிகோ டீசல்

நகர்ப்புறத்துக்கான ஓர் சிறந்த ஹேட்ச்பேக் காராக ஃபிகோவை கூறலாம். பிற மாடல்களை ஒப்பிடும்போது அதிக மைலேஜ், இடவசதி என அனைத்திலும் நிறைவானதாக இருக்கிறது. கியர் ஷிப்ட், கிளட்ச் ஆகியவை சுகமான ஓட்டுதல் அனுபவத்தை தரும். ஏசி, ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இருக்கிறது. குறைந்த டர்போ லேக் கொண்டது. நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டில் லிட்டருக்கு 14 கிமீ முதல் 17 கிமீ வரை மைலேஜ் தரும். ரூ. 5.83 லட்சம் முதலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

ஓட்டுவதற்கும், வசதிகளுக்கும் நிறைவான கார் மாருதி ரிட்ஸ். இந்த ரகத்தில் விலை சற்று கூடுதல் கொண்ட கார் மாடலும் கூட. டிரைவிங் பொஷிசன் சிறப்பான கார் இது. இதற்கு மாற்றாக நிசான் மைக்ரா டீசலை கூறலாம். டர்போ லேக் குறைவானதாக இருப்பதால், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும். லிட்டருக்கு 23.2 கிமீ வரை மைலேஜ் தரும் சான்றளிக்கப்பட்டுள்ளது. ரூ. 6.49 லட்சம் ஆன்ரோடு விலை முதல் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2013, 13:53 [IST]
English summary
Some of us have plenty of kilometres to drive in daily city traffic, especially if you have a job that involves multiple meetings at different parts of a city every day. what you need is a small car that’s easy to drive and gives great fuel economy – the obvious choice here would be a diesel car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+