சிறந்த பட்ஜெட் டீசல் ஹேட்ச்பேக் கார்கள்: கசக்கிப் பிழிந்த பட்டியல்!!
டீசல் ஹேட்ச்பேக் கார்களின் மைலேஜ் என்ற ஒற்றை சக்தி வாடிக்கையாளர்களை இன்னமும் சுண்டி இழுத்து வருகிறது. குறிப்பாக, ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான டீசல் ஹேட்ச்பேக் கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக மவுசு இருப்பது அறிந்ததே.
மிக முக்கியமான இந்த செக்மென்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் முக்கிய டீசல் ஹேட்ச்பேக் கார்களின் சாதக, பாதகங்களை அலசியுள்ளோடு, அதன் ஆரம்ப விலை மற்றும் மைலேஜ் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் சிறந்த கார் என்பதையும் தேர்வு செய்து வழங்கியுள்ளோம்.

டாடா இண்டிகா வி2
இந்தியாவின் மிகக் குறைவான விலை கொண்ட டீசல் கார் டாடா இண்டிகா இவி2. குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ் கொண்ட இந்த கார் டாக்சி மார்க்ககெட்டின் மிக முக்கிய மாடலாக விளங்குகிறது. எனவே, இது குடும்பம் மற்றும் தனிநபர் பயன்பாட்டுக்கான மார்க்கெட்டில் எடுபடாமல் இருக்கிறது.
சாதகம்: குறைந்த பராமரிப்பு, அதிக இடவசதி
பாதகம்: தரமற்ற கட்டுமானம், கவர்ச்சியற்ற டிசைன்

டாடா இண்டிகா வி2
இரண்டு வேரியண்ட்டுகளில் டாடா இண்டிகா வி2 டீசல் கார் விற்பனை செய்யப்படுகிறது.
விலை: ரூ.4.19 லட்சம்
மைலேஜ்: 18 கிமீ/லி

டாடா இண்டிகா இவி2
டாக்சி முத்திரையிலிருந்து வெளியே வருவதற்காக இண்டிகா வி2 காரைவிட தோற்றத்தில் கூடுதல் சமாச்சாரங்களுடன் வித்தியாசம் காட்ட முனைகிறது டாடா இண்டிகா இவி2. இதன் பிஎஸ்4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறந்த பவர் வெளிப்படுத்தும் திறனும் கொண்டது.
சாதகம்: இடவசதி, அதிக மைலேஜ்
பாதகம்: கவர்ச்சியற்ற டிசைன்

டாடா இண்டிகா இவி2
இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை: ரூ.4.46 லட்சம்
மைலேஜ்: 25 கிமீ/லி

டாடா இண்டிகா விஸ்டா
டாடாவின் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்தான் இண்டிவா விஸ்டா. முந்தைய இண்டிகா மாடல்களைவிட தோற்றத்தில் சற்று கூடுதல் கவர்ச்சி கொண்டதாகவே கூறலாம். 71 பிஎஸ் பவர் கொண்ட டீசல் எஞ்சின் மற்றும் 90 பிஎஸ் பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. டி90 ரூ.6 லட்சம் விலையிலிருந்து ஆரம்பமாகிறது.
சாதகம்: மைலேஜ், வசதிகள், இடவசதி
பாதகம்: தரமற்ற கட்டுமானம், அதிக விலை, மென்மையற்ற டிரான்ஸ்மிஷன்

டாடா இண்டிகா விஸ்டா
இண்டிகா விஸ்டா 6 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை: ரூ.4.61 லட்சம்
மைலேஜ்: ரூ.19.1 கிமீ/லி

செவர்லே பீட்
மார்க்கெட்டில் இப்போது மிகச் சிறிய டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு கிடைக்கும் டீசல் கார் பீட். 936சிசி டீசல் எஞ்சினுடன் குறைவான அதிர்வு மற்றும் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் வழங்கும் எஞ்சின் என்பது இந்த காரின் சிறப்பு. நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிக சிறப்பான மாடல் இது. கச்சிதமான டிசைன். டாப் வேரியண்ட்டில் அதிக வசதிகள் கொண்ட கார்.
சாதகம்: அதிக மைலேஜ், நகர்ப்புற பயன்பாடுக்கு ஏற்றது, வசதிகள்
பாதகம்: உட்புறத்தில் நெருக்கடி, பின்புறத்தில் சிறிய கண்ணாடி ஜன்னல், நெடுஞ்சாலையில் செல்வதற்கான ஏற்ற எஞ்சின் இல்லை.

செவர்லே பீட்
4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.4.74 லட்சம்
மைலேஜ்: 25.44 கிமீ/லி

ஃபோர்டு ஃபிகோ
நம் நாட்டு மார்க்கெட்டில் அதிகம் விரும்பி வாங்கப்படும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று. அதிக இடவசதியுடன், நெடுஞ்சாலையில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் தரும் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.
சாதகம்: இடவசதி, ஸ்டீயரிங், ஏசி
பாதகம்: சஸ்பென்ஷன் செயல்பாடு

ஃபோர்டு ஃபிகோ
4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.4.88 லட்சம்
மைலேஜ்: 20 கிமீ/லி

மாருதி ரிட்ஸ்
டால் பாய் டிசைன், நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிற்கும் சிறந்த காராக கூறலாம். ஆனால், இதன் பின்புற டிசைன் அனைவரையும் கவராது. இந்த காரின் டீசல் மாடல் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. மைலேஜிலும் சிறந்த காராக விளங்குகிறது.
சாதகம்: உயரமான டிரைவர்களுக்கு ஏற்ற டால்பாய் டிசைன், சிறந்த எஞ்சின், பயன்பாட்டுக்கு சிறந்த கார்
பாதகம்: பின்புற டிசைன், பின்இருக்கை இடவசதி

மாருதி ரிட்ஸ்
4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.5.42 லட்சம்
மைலேஜ்: 23.2 கிமீ/லி

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
மார்க்கெட்டுக்கு சமீபத்தில் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் கிராண்ட் ஐ10 பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்திருப்பதை நீங்கள் அறிந்ததுதான். ஏராளமான வசதிகள், நிறைவான இடவசதியுடன் கூடிய கிராண்ட் ஐ10 காரின் டீசல் மாடல் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு நேரடி போட்டியாக வந்துள்ளது கிராண்ட் ஐ10.
சாதகம்: சிறந்த ஃபிட் அண்ட் பினிஷ், டிசைன், எஞ்சின், வசதிகள்
பாதகம்: ஸ்போர்ட்டியான தோற்றம் இல்லாதது

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.5.25 லட்சம்
மைலேஜ்: 24 கிமீ/லி

நிசான் மைக்ரா
மைக்ராவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் வந்தது. இந்த காரின் டீசல் எஞ்சின் மிகச் சிறப்பானது என்பது அறிந்ததே. நகர்ப்புற பயன்பாட்டுக்கு சிறப்பான இலகுவான ஸ்டீயரிங் கொண்ட இந்த டீசல் கார், நெடுஞ்சாலை பயணத்தின்போது எஞ்சின் சிறப்பாக இல்லை என்பது மைனஸ்.
சாதகம்: வசதிகள், ஏர்பேக், தரமான கட்டுமானம், இலகு ஸ்டீயரிங்
பாதகம்: போட்டியாளர்களை ஒப்பிடும்போது சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க் இல்லாதது

நிசான் மைக்ரா
5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.5.57 லட்சம்
மைலேஜ்: 23 கிமீ/லி

மாருதி ஸ்விஃப்ட்
இந்தியாவின் அதிகம் விரும்பப்படும், விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று. ஸ்போர்ட்டியான டிசைன், சிறந்த எஞ்சின், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை ஸ்விஃப்ட் காரை வலுவான இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது. இதன் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு அனைத்து வித சாலைநிலைகளிலும் சிறந்த கையாளுமையை வழங்குகிறது.
சாதகம்: எஞ்சின், மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ், டிசைன், கையாளுமை
பாதகம்: அதிக விலை, குறைந்த கொள்ளளவு கொண்ட பூட் ரூம், சில நேரங்களில் பிரச்னை தரும் பிரேக்குகள் ஆகியவற்றை கூறலாம்.

மாருதி ஸ்விஃப்ட்
ம
3 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.5.58 லட்சம்
மைலேஜ்: 22.9 கிமீ/லி

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு
டிசைன், மைலேஜ், எரிபொருள் சிக்கனம், விலை என அனைத்து விதத்திலும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கார் மாடல்களை கசக்கிப் பிழிந்து பார்த்தால் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் சிறந்த தேர்வாக கூறலாம். கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதிகள் கொண்ட மனநிறைவான காராக கிராண்ட் ஐ10 இந்த பந்தயத்தில் வெற்றி பெறுகிறது.


Click it and Unblock the Notifications








