சிறந்த பட்ஜெட் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி கார்களின் லிஸ்ட்!

பெட்ரோல், டீசல் விலை மாதாந்திர தவணை முறையில் உயர்த்தப்பட்டு மிரட்டி வரும் நிலையில், கார் வைத்திருப்பவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாக மாறி வருகிறது. பெட்ரோல் விலை விண்ணை முட்டியதால், டீசல் பக்கம் திரும்பினர். ஆனால், மாதாமாதம் டீசல் விலை தவணை முறையில் உயர்த்தப்பட்டு வருவதால், காரை அழகு பொருளாக போர்ட்டிகோவில் நிறுத்த வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளது உண்மை.

இந்த நிலையில், புதிய கார் வாங்குவோர் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக குறைந்த எரிபொருள் செலவு கொண்ட எல்பிஜி மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் கார்களின் பக்கம் கவனத்தை திசைதிருப்பியுள்ளனர். தமிழகத்தில் சிஎன்ஜி நெட்வொர்க் இல்லையென்றாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வாசகர்கள் நலன் கருதியே இந்த தொகுப்பு.

 மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800

மார்க்கெட்டில் குறைந்த விலை சிஎன்ஜி காராக ஆல்ட்டோ 800 இருக்கிறது. பெட்ரோல் மாடலைவிட சிஎன்ஜியில் இயங்கும் மாடல் ரூ.55,000 வரை கூடுதல். சிஎன்ஜியில் இயங்கும் ஆல்ட்டோ 800 கார் லிட்டருக்கு 22.83 கிமீ மைலேஜ் கொடுக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி எஸ்டீலோ

மாருதி எஸ்டீலோ

சிஎன்ஜியில் இயங்கும்போது எஸ்டீலோவின் எஞ்சின் அதிகபட்சம் 59.3 பிஎச்பி சக்தியை அளிக்கும். நகர்ப்புறத்தில் 20.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 26.3 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும், 35 லிட்டர் எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்டு உள்ளது.

மாருதி வேகன்-ஆர்

மாருதி வேகன்-ஆர்

வேகன்-ஆர் சிஎன்ஜி மற்றும் எல்பிஜியில் இயங்கும் மாடல்களில் கிடைக்கிறது. இதன் எல்பிஜி கிட் அராய் சான்றுபெற்றது. இதன் சிலிண்டர் கிட் வாரண்டியுடன் கிடைக்கிறது. வேகன்-ஆர் காரின் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 செவர்லே ஸ்பார்க்

செவர்லே ஸ்பார்க்

செவர்லே ஸ்பார்க் எல்பிஜி சிலிண்டர் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. பெட்ரோலில் 18 கிமீ மைலேஜையும், எல்பிஜியில் செல்லும்போது 13.2 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது. 3 ஆண்டு கால வாரண்டியுடன் கிடைப்பது சிறப்பு.

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோவின் ஜில் மற்றும் ஜிஎல்எஸ் வேரியண்ட்களில் எல்பிஜி சிலிண்டர் பொருத்தப்பட்ட மாடலும் கிடைக்கிறது. 35 கிலோ கொள்ளளவு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்பிஜியில் இயங்கும்போது கிலோவுக்கு 13.7 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செவர்லே பீட்

செவர்லே பீட்

ஸ்பார்க் போன்றே இந்த காரின் எல்பிஜி கிட்டும் 3 ஆண்டு வாரண்டியுடன் கிடைக்கிறது. எல்பிஜியில் செல்லும்போது லிட்டருக்கு 13.30 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

சிறந்த ஹேட்ச்பேக் காராக பெயர் பெற்ற ஐ10 காரும் எல்பிஜி மாடலிலும் கிடைக்கிறது. 1.1 லி எரா மற்றும் மேக்னா வேரியண்ட்டுகளில் எல்பிஜி கிட்டுன் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஆல்ட்டோவின் நேரடி போட்டியாளரான இயான் கார் எல்பிஜி கிட் பொருத்தப்பட்ட மாடல் கடந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. டி-லைட், எரா, மேக்னா ஆகிய வேரியண்ட் ஆப்ஷன்களிலும் வாங்க முடியும். 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. எல்பிஜியில் செல்லும்போது லிட்டருக்கு 15.5 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2013, 12:34 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+