வாடிக்கையாளர் சேவையில் இந்தியாவின் சிறந்த கார் பிராண்டுகள்!!
கார் வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவை வழங்கும் கார் நிறுவனங்கள் குறித்து ஜேடிபவர் ஏசியா பசிபிக் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஷோரூமில் விற்பனை பிரதிநிதிகளின் அணுகும் பாங்கு, சரியான தகவல்களை வழங்கும் விதம், டீலரில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள், டெலிவிரியில் கால அளவு உள்ளிட்ட 7 விஷயங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 1000 புள்ளிகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு சிறந்த கார் நிறுவனங்களை அந்த ஆய்வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஹோண்டா மற்றும் மாருதி சிறந்த நிறுவனங்களாக பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த ஆய்வில் சராசரியாக 841 புள்ளிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. சராசரிக்கும் மேலே மற்றும் அதற்கு கீழே இடம்பிடித்த கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

1. ஹோண்டா கார்ஸ்
விற்பனை சேவையில் ஹோண்டா கார் நிறுவனத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 1000க்கு 849 புள்ளிகளை ஹோண்டா கார் நிறுவனம் பெற்றுள்ளது.

2. மாருதி சுஸுகி
கார் விற்பனையில் முதலிடத்தில் இருப்பதோடு, வாடிக்கையாளர் சேவையிலும் பெயர் பெற்ற மாருதி சுஸுகி நிறுவனமும் 849 புள்ளிகளை பெற்றாலும் சிறிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

3. ஹூண்டாய் மோட்டார்ஸ்
நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆய்வின்படி 841 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

4. மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனமும் 841 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தை பெற்றுள்ளது.

5. டொயோட்டா
டொயோட்டா நிறுவனமும் 841 புள்ளிகளை பெற்றாலும் 5ம் இடத்தை பெற்றது.

6. ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 836 புள்ளிகளுடன் பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.

7. டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 825 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.

8. நிசான்
நிசான் நிறுவனம் 824 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது.

9. ரெனோ
ரெனோவுக்கு 824 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

10. செவர்லே
செவர்லே 821 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் உள்ளது.

11. ஸ்கோடா ஆட்டோ
ஸ்கோடா ஆட்டோவுக்கு 817 புள்ளிகளுடன் பட்டியலில் 11ம் இடத்தில் உள்ளது.

12. ஃபோர்டு
ஃபோர்டு 814 புள்ளிகளுடன் 12ம் இடத்தில் உள்ளது.

13. ஃபியட்
ஃபியட் கார் நிறுவனம் 808 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








