நம்பகமான மற்றும் நம்பகத்தன்மை குறைவான டாப்-10 கார் எஞ்சின்கள்!
கார் வாங்குவது மிக முக்கியமான முடிவாக இருப்பதால் பல்வேறு விஷயங்களை அலசி, ஆராய்ந்து பார்த்து பின்புதான் ஷோரூமுக்கு செல்கிறோம். அதிலும், காரை தேர்வு செய்வதற்கு அதன் எஞ்சின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவே பல வாடிக்கையாளர்களின் கார் தேர்வுக்கு இறுதி வடிவம் கொடுக்கிறது.
இந்த நிலையில், எந்த பிராண்டின் கார் எஞ்சின் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், எந்த பிராண்டின் கார் எஞ்சின் குறைவான நம்பகத்தன்மையை கொண்டிருக்கிறது என்பது பற்றி ஒரு ஆய்வை செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது பிரிட்டனை சேர்ந்த வாரண்டி டைரக்ட் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம். இங்கிலாந்தில் ஒவ்வொரு பிராண்டின் கார் மாடல்களின் எஞ்சினில் ஏற்படும் பழுதுகளுக்கு கொடுக்கப்பட்ட காப்பீட்டு தொகை புள்ளி விபரங்களை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது வாரண்டி டைரக்ட்.
இதுபோன்று, அந்த நிறுவனம் அலசி, ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் அந்த லிஸ்ட்டை ஸ்லைடரில் காணலாம். இந்த லிஸ்டில் எந்த பிராண்டு எஞ்சின் சிறந்ததாக இருக்கும் அல்லது மோசமாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறதா? உங்களது பதிலை மனதில் வைத்துக் கொண்டு ஸ்லைடருக்கு வாருங்கள். விடை கிடைக்கும். முதலில் நம்பகமான டாப்-10 எஞ்சின்களையும், அடுத்து நம்பகமற்ற டாப்-10 எஞ்சின்களின் லிஸ்ட்டையும் ஸ்லைடரில் காணலாம்.

லேண்ட்ரோவருக்கு 10வது இடம்
டாடாவின் அங்கமான லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எஞ்சின்கள் 72ல் ஒன்றில் பழுது அல்லது பிரச்னைகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு, 10வது இடத்தை பெற்றுள்ளது.

நிசான்
மைக்ரா மற்றும் சன்னி கார்களின் எஞ்சின்கள் 76ல் ஒன்றில் பிரச்னை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு 9வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு
அமெரிக்க பிராண்டான ஃபோர்டு நிறுவனத்தின் எஞ்சின்களில் 80ல் ஒன்று பிரச்னை ஏற்படுவதாக வாரண்டி டைரக்ட் தெரிவித்து 8வது இடத்தை வழங்கியிருக்கிறது.

ஃபியட்
ஃபியட்டின் புன்ட்டோ காரின் எஞ்சின் 85ல் ஒன்று ஃபெயிலியராவதாக தெரிவிக்கப்பட்டு 7வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

லெக்சஸ்
டொயோட்டாவின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் எஞ்சின் நம்பகத்தன்மையில் 6ம் இடத்தை பிடித்துள்ளது. 101 எஞ்சின்களில் ஒன்று பிரச்னைக்குள்ளாவதாக வாரண்டி டைரக்ட் தெரிவித்துள்ளது.

ஜாகுவார்
டாடாவின் அங்கத்தில் இணைந்திருக்கும் ஜாகுவாருக்கு 5ம் இடத்தை பெற்றுள்ளது. இதன் எஞ்சின்களில் சராசரியாக 103ல் ஒன்று பிரச்னை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வால்வோ
உலகின் அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்ட கார்களான வால்வோவின் எஞ்சினும் பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கிறது. வால்வோவுக்கு 4ம் இடத்தை கிடைத்துள்ளது. வால்வோவின் கார் எஞ்சின்களில் 111ல் ஒன்றில் பிரச்னை ஏற்படுவதாக வாரண்டி டைரக்ட் ஆய்வு குறிப்பிடுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ்
ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு லிஸ்ட்டில் மூன்றாவது கிடைத்துள்ளது. மெர்சிடிசின் 119 எஞ்சின்களில் ஒன்றில் மட்டும் கோளாறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா
இந்தியாவின் நம்பகமான பிராண்டாக கடந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட டொயோட்டாவுக்கு இந்த பட்டியலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.டொயோட்டா எஞ்சினை வைத்து கவலையில்லாமல் நிலவுக்கு சென்று வரலாம் என்ற வாகனவியல் பழமொழிக்கு ஏற்ப இந்த பட்டியலில் முதன்மை பெற்றுள்ளது. டொயோட்டாவின் எஞ்சின்களில் 171க்கு ஒன்று என்ற சராசரியில் கோளாறு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்க யூகம் சரிதான்!
இந்த பட்டியலில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சராசரியாக ஹோண்டாவின் எஞ்சின்களில் 344ல் ஒன்று மட்டுமே கோளாரு ஏற்படுவதாக வாரண்டி டைரக்ட் தெரிவித்துள்ளது.

எம்ஜி ரோவர்
எம்ஜி ரோவர் பிராண்டு கார்களின் 13 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்படுகிறதாம். எனவே, நம்பகத்தன்மையற்ற லிஸ்டில் முதலிடமும், நம்பகமான பிராண்டு லிஸ்ட்டில் கடைசி இடமும் பிடித்துள்ளது.

லிஸ்ட்டின் அதளபாதாளத்தில் ஆடி
ஆடி நிறுவனத்தின் கார் எஞ்சின்களில் சராசரியாக 27ல் ஒன்று பிரச்னை கொடுப்பதாக தெரிவிகக்கப்பட்டுள்ளது.

மினி பிராண்டு
மினி பிராண்டு கார்களில் 40ல் ஒரு எஞ்சின் பிரச்னை கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

சாப் பிராண்டு
சாப் பிராண்டு கார்களின் எஞ்சின்களில் 40ல் ஒன்று பிரச்னை கொடுக்கிறதாம்.

வாக்ஸால்
வாக்ஸால் பிராண்டின் 41 எஞ்சின்களில் ஒன்று குடைச்சல் கொடுத்துவிடுவதாக வாரண்டி டைரக்ட் தெரிவித்துள்ளது.

பீஜோ
பிரெஞ்ச் கார் பிராண்டான பீஜோவின் கார் எஞ்சின்களில் 44ல் ஒன்றில் பிரச்னை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ
பிஎம்டபிள்யூவின் 45 எஞ்சின்களில் ஒன்று பிரச்னை தருவதாக வாரண்டி டைரக்ட் அறிக்கை கூறுகிறது.

ரெனோ
ரெனோவின் எஞ்சின்களில் 46ல் ஒன்று பிரச்னை கொடுத்து விடுவதாக அறிக்கையில் புலம்புகிறது வாரண்டி டைரக்ட்.

ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகனின் 52 எஞ்சின்களில் ஒன்றில் பிரச்னை ஏற்படுகிறதாம்.

மிட்சுபிஷி
ஜப்பானிய நிறுவனமான மிட்சுபிஷியின் எஞ்சின்களில் 59ல் ஒன்றில் கோளாறு ஏற்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது பெஸ்ட்? எது ஒர்ஸ்ட்?
உலகிலேயே ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற ஜெர்மனி பிராண்டுகள் தயாரிக்கும் எஞ்சின்களில்தான் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாக வாரண்டி டைரக்ட் அறிக்கை கூறுகிறது. ஜப்பானிய எஞ்சின்கள் சிறந்ததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








