இந்தியாவில் ஹைபிரிட் கேம்ரியை களமிறக்கும் டொயோட்டா!

இந்தியாவிலேயே பெட்ரோல் கேம்ரி காருடன் சேர்த்து இந்த ஹைபிரிட் கேம்ரி காரும் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதன்மூலம், உற்பத்தி செலவீனம் குறையும். பெட்ரோல் கேம்ரி காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 640 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் ஹைபிரிட் கேம்ரியில் துணைபுரியும்.
இந்த காரில் எலக்ட்ரானிக் வேரியபிள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கும். பெட்ரோல் கேம்ரியின் எஞ்சின் 140 பிஎஸ் பவரையும், 187 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், ஹைபிரிட் கேம்ரி காரின் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவை இணைந்து 189 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த காரில் நிக்கல் ஹேட்ரைடு பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
ஏராளமான பிரிமியம் அம்சங்களுடன் இந்த கார் வருகிறது. மாதத்திற்கு 25 ஹைபிரிட் கேம்ரி கார்களை விற்பனை செய்ய டொயோட்டா இலக்கு வைத்துள்ளது. பெட்ரோல் மாடலைவிட ரூ.10 லட்சம் கூடுதலான விலையில், அதாவது ரூ.30 லட்சம் ஆரம்ப விலையில் ஹைபிரிட் கேம்ரி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








