ஸ்பெஷல் லிவா, எட்டியோஸ் கார்கள் அறிமுகம்: முழு விபரம்

By Saravana

பண்டிகை காலத்தையொட்டி புதிய மாடல்கள் மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில் தற்போது டொயோட்டா நிறுவனம் கூடுதல் அம்சங்களுடன் கூடிய லிவா மற்றும் எட்டியோஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

எக்ஸ்க்ளூசிவ் என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வந்துள்ளன. லிவா மற்றும் எட்டியோஸ் கார்களில் தலா 1,000 ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

ஒரே வேரியண்ட்டில்

ஒரே வேரியண்ட்டில்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் மிட் வேரியண்ட்டான ஜி வேரியண்ட்டில் மட்டுமே இந்த ஸ்பெஷல் கார்கள் கிடைக்கும்.

டியூவல் டோன் இன்டிரியர்

டியூவல் டோன் இன்டிரியர்

சாதாரண ஜி வேரியண்ட்டில் ஒற்றை வண்ணத்தில் இன்டிரியர் இருக்கும். இந்த புதிய ஸ்பெஷல் லிவா, எட்டியோஸ் கார்களின் இன்டிரியர் க்ரீம் மற்றும் பீயேஜ் ஆகிய இரட்டை வண்ணக் கலவையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

ரிமோட், புளூடூத் கொண்ட மியூசிக் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், குரோம் கேப் கொண்ட கியர் நாப் மற்றும் தரமான ஃபேப்ரிக் இருக்கைகள் ஆகியவை கூடுதல் ஆக்சஸெரீஸ்களாக இருக்கின்றன.

 ஸ்பெஷல் பேட்ஜ்

ஸ்பெஷல் பேட்ஜ்

பிற வேரியண்ட்டுகளிலிருந்து வேறுபடுத்தும் விதமாக ஸ்பெஷல் லிவா, எட்டியோஸ் கார்களின் பின்புறம் "Xclusive" பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

லிவா எக்ஸ்க்ளூசிவ் பெட்ரோல் - ரூ.4,95,349

லிவா எக்ஸ்க்ளூசிவ் டீசல் - ரூ.6,05,400

எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் பெட்ரோல் - ரூ.6,05,900

எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் டீசல் - ரூ.7,13,243


More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2013, 11:48 [IST]
English summary
The next festive season special edition car for India has been announced and this time its from Toyota. The Japanese automaker has announced ‘Xclusive Edition' models for the Etios and Liva sedan and hatchback. Only 1000 units of each model will be made, thus qualifying for the ‘Xclusive' tag.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+