டொயோட்டாவின் எக்ஸ்பிரஸ் கார் சர்வீஸ் திட்டம் அறிமுகம்!
கார்களை விரைவாக சர்வீஸ் செய்து தரும் புதிய சேவையை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.
டெல்லியில், ராமா சாலையில் உள்ள கேலக்ஸி டொயோட்டா டீலர்ஷிப்பில் இந்த புதிய எக்ஸ்பிரஸ் சர்வீஸ் சேவை முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 8,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் இதற்கான புதிய சர்வீஸ் ஸ்டேஷனில் நாள் ஒன்றுக்கு 35 கார்களை சர்வீஸ் செய்ய முடியும்.
ஒரு மணி நேரத்திற்குள் சர்வீஸ் செய்து காரை டெலிவிரி பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாமல் காரை கழுவி சுத்தம் செய்யும் புதிய தொழில்நுட்பமும் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீரில் கழுவுவதைவிட இந்த முறையில் காரை மிக சுத்தமாக கழுவ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பெங்களூரில் இந்த புதிய விரைவு சர்வீஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








