இந்தோனேஷியாவில் மேம்படுத்தப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர்
இந்தோனேஷியாவில் மேம்படுத்தப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டிஆர்டி ஸ்போர்டிவோ கிட்டும் ஃபார்ச்சூனருக்கு வழங்கப்படுகிறது.
சமீபத்தில்தான் மேம்படுத்தப்பட்ட இன்னோவா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஃபார்ச்சூனரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரன்னிங் விளக்குகள்
பம்பரில் பகல் நேர ரன்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

முகப்பு கிரில்
சாதாரண மாடலின் முகப்பு கிரில் குரோம் பட்டைகள் கொண்டதாகவும், டிஆர்டி ஸ்போர்டிவோ மாடலில் கருப்பு நிற கிரில்லும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஆர்டி ஸ்போர்ட்டிவோ
டிஆர்டி ஸ்போர்ட்டிவோ வேரியண்ட்டில் பம்பரில் கருப்பு கிளாடிங்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய அலாய் வீல்கள்
புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

மியூசிக் சிஸ்டம்
புதிய டிவிடி பிளேயருடன் கூடிய பொழுதுபோக்கு சாதனம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டர் டீசல் மாடலில் அங்கு கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 3.0 லிட்டர் டீசல் மாடலில் மட்டுமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

விலை
இந்திய மதிப்பில் ரூ.24 லட்சம் முதல் ரூ.29 லட்சம் வரையிலான விலையில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலுக்கு ரூ.4,000 முதல் ரூ.29,000 வரை வேரியண்ட்டுக்கு தக்கவாறு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய ஃபார்ச்சூனர்
2016ம் ஆண்டில்தான் புதிய ஃபார்ச்சூனர் விற்பனைக்கு வர இருக்கிறது. அதுவரை ஃபார்ச்சூனரில் பெரிய மாற்றங்கள் இருக்காது.


Click it and Unblock the Notifications








