டொயோட்டா கார் விலை ரூ.24,000 வரை உயர்கிறது - முழு விபரம்
உற்பத்தி செலவீனம் அதிகரித்து வருவதையடுத்து, கார் விலையை ரூ.24,000 வரை உயர்த்துவதாக டொயோட்டா அறிவித்துள்ளது. வரும் 21ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கத்தால் உற்பத்தி செலவீனம் அதிகரித்திருப்பதை காரணம் காட்டி விலை உயர்வை அறிவித்துள்ளது டொயோட்டா. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

இன்னோவா
டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடலான இன்னோவா விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.7,000 முதல் ரூ.11,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இன்னோவா ரூ. 9.77 லட்சம் முதல் ரூ.14.42 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.

லிவா
லிவா காரின் விலை ரூ.4,500 முதல் ரூ.8,600 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.4.46 லட்சம் முதல் ரூ.6.59 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் தற்போது லிவா கிடைக்கிறது.

கரொல்லா ஆல்டிஸ்
கரொல்லா ஆல்டிஸ் விலை ரூ.11,000 முதல் ரூ.24,000 வரை உயர்ந்துள்ளது. இந்த கார் ரூ.11.74 லட்சம் முதல் ரூ.15.89 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எட்டியோஸ்
எட்டியோஸ் விலை ரூ.4,000 முதல் ரூ.8,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5.45 லட்சம் முதல் ரூ.8.15 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை
ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்களால் இறக்குமதி பாகங்களுக்கு அதிக தொகையை திருப்பி செலுத்துவதால் உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்கும் பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்று டொயோட்டா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








