உற்பத்திக்கு செல்லும் டொயோட்டா ஐ ரோடு எலக்ட்ரிக் கார்!
ஐ- ரோடு கான்செப்ட் எலக்ட்ரிக் காரை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்ல டொயோட்டா நிர்வாகம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற இந்த எலக்ட்ரிக் கார் கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.
நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட இந்த ஐ ரோடு கான்செப்ட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது உற்பத்தி நிலைக்கு செல்வதில் இருந்த ஐயப்பாடு தற்போது நீங்கியுள்ளது.

த்ரீ வீலர்
இந்த ஐ ரோடு கான்செப்ட் மூன்று சக்கரங்கள் கொண்ட சிறிய ரக எலக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். இதை கார் என்பதைவிட கூரையுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கூறலாம்.

செல்ஃப் பேலன்சிங்
முன்புறம் இரண்டு சக்கரங்களும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. வளைவுகளில் திரும்பும்போது செல்ஃப் பேலன்சிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தானாகவே நிலைத்தன்மையை மாற்றிக் கொண்டு சிறப்பாக திரும்பும்.

இருக்கை வசதி
இந்த எலக்ட்ரிக் காரில் 2 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது. பேட்டரியில் இயங்கும் வாகனம் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் அதிக தீங்கு ஏற்படுத்தாது.

ரேஞ்ச்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை சென்று வர முடியும்.

டாப் ஸ்பீடு
மணிக்கு அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் செல்லும்.


Click it and Unblock the Notifications








