தீபாவளிக்கு முன்னதாக வரும் டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட்!!
தீபாவளிக்கு முன்னதாக மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் மிக வெற்றிகரமான எம்பிவி மாடலாக வலம் வரும் டொயோட்டா இன்னோவா பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படாமலேயே விற்பனையில் சாதித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் இந்தோனேஷிய மார்க்கெட்டில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இன்னோவா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடல் இந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகப்பு மாற்றம்
குரோம் பட்டைகளுடன் கூடிய பெரிய கிரில், தாழ்வான ஏர்டேம், புதிய ஸ்டைலான பம்பர், குரோம் வளையத்துடன் பனி விளக்குகள் ஆகியவை புதிய இன்னோவாவை வேறுபடுத்துகிறது.

பின்புறம்
பின்புறத்தில் எளிதாக வேறுபடுத்தும் விதத்திலும், அழகாகவும் மாற்றப்பட்டிருக்கிறது மேம்படுத்தப்பட்ட இன்னோவா.

அம்சங்கள் விபரம்
இந்தோனேஷியாவில் ஜே என்ற பேஸ் வேரியண்ட்டில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதேவேளை, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் ஆகியவை நிரந்தரமாக அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர அம்சங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே வேரியண்ட்டுகள் மற்றும் அம்சங்களுடன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்
இந்தோனேஷிய மாடலில் எஞ்சினிலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. 136 பிஎச்பி பவரையும், 183 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 112 பிஎச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடலிலும் அங்கு கிடைக்கிறது.

விலை ஏற்றம்
மேம்படுத்தப்பட்ட இன்னோவாவை அறிமுகம் செய்யும்போதே சேர்த்து விலையையும் உயர்த்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ12.4 லட்சம் முதல் ரூ.18.5 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த புதிய இன்னோவா இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








