இந்தியாவில் 1,000 ஆல்டிஸ் கார்களை திரும்ப பெறும் டொயோட்டா
டிரைவ் சாஃப்டில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னையை சரிசெய்து தருவதற்காக 1,000 கரொல்லா ஆல்டிஸ் கார்களை திரும்ப பெற இருப்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ந் தேதி முதல் கடந்த பிப்ரவரி மாதம் 14ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட டீசல் கார்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது.

சம்பந்தப்பட்ட கார்களின் டிரைவ்சாஃப்ட்டில் பிரச்னை இருப்பது தெரிந்தால், அதனை இலவசமாக மாற்றித் தரப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. மொத்தம் 1,000 கார்கள் திரும்ப பெறப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் இந்தியாவில் டொயோட்டா விடுக்கும் மூன்றாவது ரீகால் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








