டெல்லியில் போக்குவரத்து விதி மீறுவோரை ஸ்கூலுக்கு அனுப்பும் போலீசார்!
டெல்லியில் போக்குவரத்து விதி மீறுவோரை திருத்தும் வகையில், புதிய முயற்சியை அம்மாகர போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டனை, அபாரதங்கள் போன்றவை போதிய பலனளிக்கவில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.இதற்காக, புதிய முயற்சியை அவர்கள் கையிலெடுத்துள்ளனர்.

குடித்து விட்டு வரும் வாகன ஓட்டிகள் அல்லது சாலையில் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுபவர்களை பிடித்து அபராதங்கள் அல்லது தண்டனை கொடுப்பதற்கு மாற்றாக இந்த திட்டத்தை அமலுக்கு வந்துள்ளது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் தனது தவறை மீண்டும் செய்யாத வண்ணம் சிறப்பு வகுப்புகளையும், பயிற்சிகளையும் வழங்க உள்ளனர்.
சாலையில் முறையாக வாகனம் ஓட்டுவதற்கான பயற்சி மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இதுதவிர, சாலை விபத்துக்கள் குறித்த வீடியோ மற்றும் படங்கள் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு தொடர்பான நிபுணர்களும், போக்குவரத்து போலீசாரும் விதி மீறுவோருக்கு பயற்சிகளை வழங்க உள்ளனர். இதுபோன்று, விதி மீறலில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளுக்கு 4 மணி நேரம் வீதம் 15 நாட்களுக்கு இந்த சிறப்பு பள்ளியில் விதி மீறுவோருக்கு பாடங்கள் மற்றும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








