இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்கள் லிஸ்ட்

By Saravana

எரிபொருள்களின் விலை உயர்வு, கார்கள் மீதான கூடுதல் வரிகள், ஸ்திரமற்ற பொருளாதார நிலை என பல்வேறு காரணங்களால் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் சுணக்கம் காணப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் பாதகங்களாக கூறினாலும், இதுவரை செய்துள்ள முதலீடுகளை தக்கவைத்துக் கொள்ளவும் வாடிக்கையாளர்களை எந்த ரூபத்திலாவது கவரும் அம்சங்களுடன் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த கார் நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கார் மார்க்கெட்டில் புதிய கார் மாடல்களின் வரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கார் தேர்வு செய்வதற்கு பட்டியல் தயாரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில், விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்களின் விபரத்தையும் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

 பென்ட்லி ப்ளையிங் ஸ்பர்

பென்ட்லி ப்ளையிங் ஸ்பர்

எதிர்பார்க்கும் விலை: ரூ.2.25 கோடி

இந்தியாவில் நாளை விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த புதிய பென்ட்லி கார் கான்டினென்டல் ஜிடி அடிப்படையில் டிசைன் செய்யப்பட்டது. நான்கு கதவுகள் கொண்டதாக வரும் இந்த புதிய ஆடம்பர கார் நம் லிஸ்ட்டை மட்டுமல்ல, இந்திய மண்ணையும் அலங்கரிக்க வருகிறது. கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தமிழ் டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

புதிய ஸ்கோடா ஆக்டாவியா

புதிய ஸ்கோடா ஆக்டாவியா

எதிர்பார்க்கும் விலை: ரூ.11.5 லட்சம்

வரும் 3ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய ஆக்டாவியா ஏராளமான சிறப்பம்சங்களை தாங்கி வருகிறது. அதிக இடவசதி, குறைந்த கார்பன் புகை, ஏராளமான வசதிகள் என ஸ்கோடா ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ள மாடல். இரண்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரு டீசல் மாடலில் வருகிறது. ஆக்டாவியா பற்றி முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

 நிசான் டெரானோ

நிசான் டெரானோ

எதிர்பார்க்கும் விலை: ரூ.8 லட்சம்

டஸ்ட்டரில் மாறுதல்களை செய்து நிசான் வெளியிடும் எஸ்யூவி மாடல். கூடுதல் பிரிமியம் அம்சங்கள், புதிய தோற்றம் ஆகியவை டெரானோவுக்கு கூடுதல் வலுசேர்க்கின்றன. அக்டோபர் 9ந் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா

புதிய டொயோட்டா இன்னோவா

எதிர்பார்க்கும் விலை: ரூ.9.9 லட்சம்

இந்திய மார்க்கெட்டில் நீங்காத இடம்பிடித்து வைத்திருக்கும் டொயோட்டா இன்னோவா தற்போது தோற்றத்தில் கூடுதல் பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிசான் டெரானோ அறிமுகமாகும் அக்டோபர் 9ந் தேதிதான் புதிய இன்னோவாவும் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிகிறது.

 நிசான் எவாலியா

நிசான் எவாலியா

எவாலியாவின் குறைபாடுகளை வாடிக்கையாளர் பின்னூட்டங்களின் வாயிலாக அறிந்து கொண்டு சில மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது நிசான். அக்டோபர் அறிமுக பட்டியலில் எவாலியாவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி

எதிர்பார்க்கும் விலை ரூ.45 லட்சம்

அதிக இடவசதி, பூட்ரூம் கொண்டதாகவும், பல்வேறு ரக கார்களின் ஒருங்கே வழங்கும் வகையிலான இந்த சொகுசு கார் பிப்ரவரியில் நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

 மாருதி புதிய ஏ ஸ்டார்

மாருதி புதிய ஏ ஸ்டார்

எதிர்பார்க்கும் விலை: ரூ.3.6 லட்சம்

விற்பனையில் சோபிக்காமல் இருந்து வரும் ஏ ஸ்டாருக்கு மாற்றாக புதிய மாடலை மாருதி களமிறக்குகிறது. புதிய 800சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. புதிய ஏ ஸ்டார் தோற்றத்தில் பல படிகள் முன்னேற்றத்துடன் வர இருக்கிறது. எனவே, மாருதிக்கு விற்பனையில் உந்துதலை கொடுக்கும் என நம்பலாம்.

 புதிய செவர்லே பீட்

புதிய செவர்லே பீட்

சிறிய மாறுதல்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பீட் மாடலை இந்தியாவில் செவர்லே கொண்டு வர இருக்கிறது. எஞ்சின்களில் மாற்றம் இருக்காது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா

மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா

எதிர்பார்க்கும் விலை: ரூ.7.5 லட்சம்

ஃபியட் நிறுவனத்துக்கு தற்போது மிக முக்கியமான கார் மாடல் லீனியா. எனவே, அதிக மாற்றங்களை செய்து லீனியாவை அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபியட். தற்போது தீவிர சோதனையில் இருக்கும் இந்த புதிய லீனியா இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் ரேங்லர்

ஜீப் ரேங்லர்

எதிர்பார்க்கும் விலை: ரூ.30 லட்சம்

மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்துடன் களமிறங்கி இருக்கும் ஃபியட் தனது அங்கமான ஜீப் பிராண்டில் கொண்டு வர இருக்கும் ஆஃப்ரோடர் எஸ்யூவி. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டட்சன் கோ

டட்சன் கோ

எதிர்பார்க்கும் விலை: ரூ.3.25 லட்சம்

நிசான் அங்கமான டட்சன் பிராண்டில் வர இருக்கும் குறைந்த விலை கார். மைக்ராவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. சிறந்த இடவசதி, குறைந்த விலை போன்றவை ஆவலை அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

நானோ டீசல்

நானோ டீசல்

எதிர்பார்க்கும் விலை: ரூ.3 லட்சம்

பட்ஜெட் வாடிக்கையாளர்களிடமும், இரண்டாவது கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கார் மாடல். லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் என்பதுடன் இந்திய மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலை டீசல் காராக இருக்கும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

எதிர்பார்க்கும் விலை: ரூ.6 லட்சம்

ஈக்கோஸ்போர்ட்டுக்கு எதிராக மாருதி களமிறக்க இருக்கும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி. வழக்கம்போல் போட்டியாளர்களுக்கு தலைவலி கொடுக்கும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் கிராண்ட் செரோக்கீ

ஜீப் கிராண்ட் செரோக்கீ

எதிர்பார்க்கும் விலை: ரூ.40 லட்சம்

ஃபியட் களமிறக்க இருக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கீ பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. தற்போது தீவிர சோதனையில் இருக்கிறது. மிக கம்பீரமான டிசைன், அதிசக்திவாய்ந்த எஞ்சின், சொகுசு வசதிகள் என உருவத்திற்கு தகுந்த அம்சங்களுடன் வருவதால் பலர் காத்துக் கிடக்கின்றனர்.

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ்

எதிர்பார்க்கும் விலை ரூ.5.5 லட்சம்

புண்ணியமில்லாமல் போன ஜாஸ் காரை புண்ணியவானாக ஆக்கிக் கொள்ளும் வகையில் புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது ஹோண்டா. ஜப்பானில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த இந்த ஜாஸ் விரைவல் இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மிக நேர்த்தியான டிசைன், தரம், வசதிகள் என வாடிக்கையாளர் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளாமல் காத்துக் கிடக்க வைத்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்

எதிர்பார்க்கும் விலை: ரூ.5.5 லட்சம்

இந்தோனேஷிய மார்க்கெட்டுக்காக டட்சன் பிராண்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காம்பெக்ட் எம்பிவி. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த எம்பிவி கார் மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் ஆகிய எம்பிவி கார்களுக்கு நெருக்கடியை தரும் மாடல்.

 ஃபோக்ஸ்வேகன் டைகுன்

ஃபோக்ஸ்வேகன் டைகுன்

எதிர்பார்க்கும் விலை ரூ.10 லட்சம்

மாருதி, ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கம், ஈக்கோஸ்போர்ட்டுக்கும் மல்லுக்கட்டும் வகையில் ஃபோக்ஸ்வேகன் கொண்டு வர இருக்கும் புதிய காம்பெக்ட் எஸ்யூவிதான் டைகுன். ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் போன்று ஃபோக்ஸ்வேகன் வடிவமைத்து இருக்கும் புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் மாடல்களிலும் வரும். அறிமுகம் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், நிச்சயம் வரும் என்று யூகிக்கப்படும் மாடல் என்பதால் பட்டியலின் இறுதியில் சேர்ந்துள்ளது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விலை விபரங்கள், அறிமுக தேதியில் மாறுபாடுகள் இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2013, 7:31 [IST]
English summary
Car manufacturers are searching for new avenues where none existed before. They have forged new partnerships to better cope with the problems at hand. And there are more new car launches scheduled than ever before. Lets us take a look at some of the upcoming cars that will likely hit Indian shores in the near future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+