நானோவுக்கும், இண்டிகாவுக்கும் இடையில் வரும் புதிய கார்!!
நானோவுக்கும், இண்டிகாவுக்கும் இடையில் புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருகிறது. எக்ஸ்ஸீரோ மற்றும் டால்பின் என்ற குறியீட்டு பெயர்களில் அழைக்கப்படும் வரும் இந்த கார் முற்றிலும் மாறுபட்ட டிசைன் கொண்டதாக இருக்கும்.
இந்த காரின் மாதிரி டிசைன்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. மாதிரி படங்கள், கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்
விஸ்டா ஹேட்ச்பேக் கார் அடிப்படையில்தான் இந்த கார் வடிவமைக்கப்படுகிறது. இப்போது வெளியாகியுள்ள மாதிரி படங்களில் பார்க்க செவர்லே பீட் போல இருக்கிறது.
பட உதவி: Team BHP

விஸ்டா அம்சங்கள்
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் மேம்படுத்தப்பட்ட விஸ்டா காரின் அம்சங்களை இந்த காரும் கொண்டிருக்கும்.

டீசல் மாடல்
3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டர்போ டீசல் எஞ்சினுடன் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பட உதவி: Motorbeam

சனந்தில் உற்பத்தி
குஜராஜ் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் நானோ கார் தொழிற்சாலையில் இந்த புதிய காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. நானோ கார் உற்பத்தி இழப்பை இந்த கார் மூலம் சரிகட்ட டாடா திட்டமிட்டுள்ளது.

போட்டியாளர்கள்
மாருதி ஆல்ட்டோ 800, டட்சன் கோ, ஹூண்டாய் இயான் ஆகிய கார்களுடன் இந்த புதிய டாடா கார் போட்டி போடும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலைப்பட்டியலுக்குள் சேரும்.
பட உதவி: Motorbeam

அறிமுகம்?
டாடா மோட்டார்ஸின் புதிய ஏஎம்பி மோடுலர் பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப்படும் என்று கருதப்படுகிறது. எனவே, 2015ம் ஆண்டு இறுதியில் அல்லது 2016ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உறுதியான தகவல் இல்லை.
படம்: Santheep Karian, Oneindia.


Click it and Unblock the Notifications








