குளிர்ந்த காற்றில் இயங்கும் கார் கண்டுபிடிப்பு

குளிர்ந்த காற்றில் இயங்கும் காரை இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பொறுப்பை தற்போது எஞ்சினிரியங் நிறுவனம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளது. மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.

ஆனால், அதில் பல இன்னும் சோதனை கட்டங்களை விட்டு தாண்டியபாடில்லை. இந்த நிலையில், நீராவி எஞ்சின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் டியர்மேன் என்பவர் குளிர்ந்த காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்துள்ளார். 25 ஆண்டுகள் பழமையான தனது வாக்ஸ்ஹால் நோவா காரில் இந்த தொழில்நுட்பத்தை வைத்து சோதனை நடத்தியிருக்கிறார்.

திரவமாக மாறும் காற்று

திரவமாக மாறும் காற்று

காற்றை மைனஸ் 190 டிகிரி வெப்பநிலையில் வைத்து திரவமாக மாற்றி அதனை பீர் கேஜில் நிரப்பி காரில் பொருத்தியுள்ளார்.

 அடுத்தது...

அடுத்தது...

இந்த குளிர்ச்சியான நிலையில் இருக்கும் திரவ வாயுவை குழாய் மூலம் செலுத்தி வெளிப்புற வெப்பநிலையை பயன்படுத்தி விரிவடையச் செய்யப்படுகிறது.

பிஸ்டனுக்கு அழுத்தம்

பிஸ்டனுக்கு அழுத்தம்

திரவ நிலையிலுள்ள காற்று விரிவடைந்து பிஸ்டனுக்கு அழுத்தம் கொடுத்து கார் நகரும் வகையில் இந்த கான்செப்ட்டை உருவாக்கியிருக்கிறார் டியர்மேன்.

வேகம்

வேகம்

திரவ வாயு மூலம் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு சென்ற இந்த கார் மணிக்கு 48 கிமீ வேகத்தை தொட்டதாக தெரிவித்துள்ளார்.

 எரிபொருள் விலை மிச்சம்

எரிபொருள் விலை மிச்சம்

செலவு குறைவு என்பதுடன் எடை குறைவாக இருப்பதால் குளிர்ந்த காற்றை தேர்வு செய்ததாக அவர் கூறியிருக்கிறார். இந்த கார் காற்று விசையில் நகர்வதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு தராது.

மேம்படுத்தும் முயற்சி

மேம்படுத்தும் முயற்சி

இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியை ரிகார்டோ என்ற எஞ்சினியரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2013, 11:57 [IST]
English summary
A UK-based Peter Dearman has developed a car that runs only on cold air and it can reach speeds of up to 48 km per hour. Peter Dearman has modified his a 25-year-old Vauxhall Nova to run on nothing but air.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+