பிஎம்டபிள்யூ எம்5 வை ஒரு கை பார்க்க வரும் புதிய கார்!
ஜெனரல் மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹோல்டன் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் கார்களை ரீபேட்ஜ் செய்து தருகிறது. இதுதவிர, ஆஸ்திரேலியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்புகளை விற்பனை செய்யும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் அதிவேக உற்பத்தி நிலை காரான ஹோல்டன் ஜென்-எஃப் ஜிடிஎஸ் கார் இப்போது இங்கிலாந்து மார்க்கெட்டில் களமிறங்குகிறது.
வாக்ஸ்ஹால் விஎக்ஸ் ஆர்8 என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள இந்த காரில் செவர்லே கமாரோ இசட்எல்1 மற்றும் கேடில்லாக் சிடிஎஸ் வி கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 6.2 லிட்டர் வி8 எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் பவரை 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வீல்களுக்கு கடத்தும்.
தோற்றத்தை பொறுத்தவரை 20 இஞ்ச் அலாய் வீல்கள், எல்இடி விளக்குகள் ஆகியவையும், புதிய இன்டிரியரும் இந்த காருக்கு புதிய கம்பீரத்தை அளிக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் தொட்டுவிடும் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ. பிஎம்டபிள்யூவின் பெர்ஃபார்மென்ஸ் காராக புகழப்பெறும் எம்-5 மற்றும் ஆடி ஆர்எஸ்4 கார்களுக்கு இது நேரடி போட்டியாக களமிறங்குகிறது.

வாக்ஸ்ஹால் விஎக்ஸ்ஆர்8

வாக்ஸ்ஹால் விஎக்ஸ்ஆர்8

வாக்ஸ்ஹால் விஎக்ஸ்ஆர்8

வாக்ஸ்ஹால் விஎக்ஸ்ஆர்8

வாக்ஸ்ஹால் விஎக்ஸ்ஆர்8

வாக்ஸ்ஹால் விஎக்ஸ்ஆர்8



Click it and Unblock the Notifications








