கார் விலையை உயர்த்துவதாக மஹிந்திரா, ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு
ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அனைத்து பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கார்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.
எந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயரும் என்பது பற்றிய தகவல் வெளயிடப்படவில்லை. மாடலுக்கு தகுந்தவாறு விலை உயர்வு இருக்கும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மாருதி, ஹூண்டாய், டாடா, நிசான், ரெனோ வரிசையில் தற்போது மஹிந்திராவும், ஃபோக்ஸ்வேகனும் விலை உயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








