புதிதாக 50,000 பேரை பணியமர்த்தும் ஃபோக்ஸ்வேகன்: இந்தியர்களுக்கு வாய்ப்பு

By Saravana
Volkswagen Logo
இந்தியா மற்றும் சீனாவிலிருந்து அதிக அளவில் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு உலகின் மாபெரும் கார் குழுமமான ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் தற்போது 5.5 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், சீனாவில் மட்டும் 3 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்த நிலையில், தனது உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு ஏதுவாக 50,000 புதிய பணியாளர்களை நியமிக்க ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.

அதுவும் தனது தாயகமான ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இந்த முறை புதிய பணியாளர்களை தேர்வு செய்வதை தவிர்க்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து அதிக அளவில் பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பாவில் பொருளாதார நிலைமை சரியில்லாததால், அங்கு அதிகளவில் முதலீடு செய்வதற்கும் அந்த நிறுவனம் விரும்பவில்லை. இதனாலேயே, ஐரோப்பாவில் புதிய பணியாளர்களை எடுப்பதற்கு அந்த நிறுவனம் தவிர்க்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2013, 16:29 [IST]
English summary
To realize its goal of becoming the world's largest automobile company, the German auto giant VW is looking to hire additional 50,000 workers by the year 2018. The automaker already has a 550,000 strong workforce, which it wants to increase to 600,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+