அடுத்து வென்ட்டோ ஜிடி மாடலையும் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!

By Saravana

அடுத்த வாரம் வென்ட்டோ ஜிடி பெட்ரோல் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஃபோக்ஸ்வேகன். போலோ ஹேட்ச்பேக் காரில் ஜிடி மாடல்களையும், கிராஸ்போலோவையும் அறிமுகப்படுத்திய ஃபோக்ஸ்வேகன் அடுத்ததாக வென்ட்டோ ஜிடி மாடலையும் அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய வென்ட்டோ ஜிடி மாடலில் புதிய எஞ்சின் மற்றும் புதிய டிரான்ஸ்மிஷன்களுடன் வர உள்ளது. எனவே, சாதாரண எஞ்சின்களை ஓரம் கட்டிவிட்டு அனைத்தும் டர்போசார்ஜர் எஞ்சின்களாக ஃபோக்ஸ்வேகன் மாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது வென்ட்டோவில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய வென்ட்டோ ஜிடி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் டர்போசார்ஜர் உதவியுடன் 105 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். போலோ ஜிடியில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் எஞ்சின்தான் இது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

போலோ ஜிடி டிஎஸ்ஐ மாடலை போன்றே இந்த புதிய வென்ட்டோவிலும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது. அதேவேளை, இந்த மாடலை வேறுபடுத்தும் விதத்தில் ஜிடி பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கும்.

 சிறந்த மாடல்

சிறந்த மாடல்

ரூ.9 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான ஆட்டோமேட்டிக் செடான்களில் மிகச்சிறப்பான கார் மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டியின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதும் இதற்கு கூடுதல் பலத்தை தரும்.

ஆனால்...

ஆனால்...

சிறந்த ஆட்டோமேட்டிக் செடான் காராக இருந்தாலும், 6 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட ஃபோர்டு ஃபியஸ்ட்டாவே சிறந்ததாக இருந்து வருகிறது. ஏனெனில், ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஆட்டோமேட்டிக் மாடலுக்கு 10 ஆண்டுகள் பூஜ்ய பாரமரிப்பு வாரண்டியை ஃபோர்டு வழங்குகிறது. எனவே, வென்ட்டோ ஜிடி மாடலின் விலையை பொறுத்தே அதன் வெற்றியும் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2013, 13:26 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+