புதிய காம்பெக்ட் செடானை களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்
மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பையடுத்து, புதிய காம்பெக்ட் செடானை களமிறக்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலோ, வென்ட்டோ கார்களால் நன்மதிப்பு கிடைத்தாலும், இந்திய மார்க்கெட்டில் மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறது ஃபோக்ஸ்வேகன்.
இதையடுத்து, புதிய மாடல்களை அறிமுகம் செய்து தனது மார்க்கெட்டை வலுவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய காம்பெக்ட் செடானை களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 4 மீட்டருக்கும் குறைவான வென்ட்டோவின் கத்தரி போட்ட மாடலையும், அப் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான புதிய காம்பெக்ட் செடான் என இரு மாடல்களை பரீட்சார்த்த முறையில் அந்த நிறுவனம் வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.

அதிகாரி சூசகம்
ஃபோக்ஸ்வேகன் நிர்வாக இயக்குனர் மகேஷ் கொடுமுடி பிரபல வர்த்தக இதழுக்கு அளித்த பேட்டியில் தற்போது நிலவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு புதிய செக்மென்ட்டில் கார் மாடல்களை களமிறக்குவது அவசியம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.

இரு மாடல்கள்
காம்பெக்ட் செடான் காரை வடிவமைப்பதில் ஃபோக்ஸ்வேகன் மும்முரமாக இருந்து வருகிறது. இதற்காக, இரண்டு கார் மாதிரிகளை ஃபோக்ஸ்வேகன் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

'கத்தரி' மாடல்
வென்ட்டோ மிட்சைஸ் செடான் காரின் பின்பகுதியில் கத்தரி போட்டு 4 மீட்டருக்குள் சுருக்கி ஒரு மாடல் தயாரிக்கப்படுகிறதாம். இது வென்ட்டோவின் 2,552 மிமீ வீல் பேஸ் கொண்டதாகவே இருக்கும். பின்புற பூட் ரூம் பகுதி மட்டும் குறைக்கப்பட்டிருக்கும்.

அப் செடான்
மற்றொரு காம்பெக்ட் செடான் மாடல் அப் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான செடான் காராக இருக்கும்.

வாய்ப்பு
வென்ட்டோ செடான் காரை உடனடியாக கத்தரி போட்டு உடனடியாக களமிறக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், இதனை 4 மீட்டருக்குள் சுருக்கும்போது தோற்றம் அவ்வளவு சிறப்பாக இருக்காது என ஃபோக்ஸ்வேகன் கருதுகிறது. எனவே, அப் அடிப்படையிலான செடான் கார் சிறந்ததாக ஃபோக்ஸ்வேகன் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அப் அடிப்படையிலான செடானுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








