பவர்ஃபுல் போலோ காருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் ஃபோக்ஸ்வேகன்
விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக போலோ கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. கிராஸ்போலோ, போலோ டிடிஐ ஆகிய அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகளை பெறலாம்.
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இரு மாதங்களில் பவர்ஃபுல் போலோ டிடிஐ காருக்கும் சலுகைகளை ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. ரூ.8.08 லட்சம் விலையில் வந்த அந்த காருக்கு ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனசும் பெறலாம்.

இதுதவிர, 3 ஆண்டுகளுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் இலவச பராமரிப்பு சலுகைகளை பெறலாம். மேலும், 24 மணிநேர சாலை அவசர உதவித் திட்டத்தையும் இலவசமாக பெறும் வாய்ப்பும் இப்போது இருக்கிறது.
சில டீலர்களில் கிராஸ் போலோ மாடலுக்கு ரூ.15,000 பணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளை கடன் திட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் பெறலாம்.


Click it and Unblock the Notifications








