ஏராளமான சலுகைகளுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ!
ஏராளமான சலுகைகளை உள்ளடக்கிய புதிய கடன் திட்டத்தை போலோ, வென்ட்டோ கார்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றுமுதல் வரும் 25ந் தேதி வரை காரை முன்பதிவு செய்வோருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் பொருந்தும்.
அதாவது, போக்ஸ்வேகன் போலோ அல்லது வென்ட்டோ காரை முன்பதிவு செய்யும்போது விலையில் 20 சதவீதத்தை முன்பணமாக கட்ட வேண்டும். மீதமுள்ள கடன் தொகையை மாதாந்திர தவணைத் திட்டங்களில் செலுத்தலாம்.

போலோ காருக்கு 20 சதவீதத்தை செலுத்திவிட்டு மாதம் ரூ.9,999 செலுத்த வேண்டும். வென்ட்டோ காருக்கு ரூ.14,699 மாதத் தவணையாக செலுத்த வேண்டும். சரி, இதில் என்ன சலுகை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? - ஆம், இந்த கடன் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகளுக்கான இன்ஸ்யூரன்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சாலை அவசர உதவி ஆகிய திட்டங்களை இலவசமாக பெறலாம்.
ஃபோக்ஸ்வேகன் "Fully loaded" என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த சலுகைகளை இன்று முதல் வரும் 25ந் தேதி வரை போலோ, வென்ட்டோ கார்களை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, போலோ, வென்ட்டோ கார்கள் தற்போது புளுடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட்டுகள் மற்றும் எஸ்டி கார்டு ரீடர் வசதி கொண்ட 2 டின் ஆர்சிடி 320 மியூசிக் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








