ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ செல்லும் அப் எலக்ட்ரிக் கார்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அப் ஹேட்ச்பேக் காரின் எலக்ட்ரிக் மாடலை ஃபோக்ஸ்வேகன் பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் தலைமையகத்தில் நடந்த வருடாந்திர முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த காரை ஃபோக்ஸ்வேகன் வைத்துள்ளது.

நகர்ப்புறத்துக்கு ஏற்ற சிறந்த ஹேட்ச்பேக் காராக வர இருக்கும் இந்த மாதிரி 4 டோர் மாடல் என்பது மிக முக்கிய அம்சம். ஏனெனில், ஐரோப்பிய மாடல் 2 டோர் மாடலாக இருக்கிறது. இந்த நிலையில், 4 டோர் மாடலாக இருப்பதால் இந்தியாவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த காரின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 பேட்டரி

பேட்டரி

இந்த காரில் 18.7 கேவிஎச் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

 பவர்

பவர்

இந்த கார் 82 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 135 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். 14 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும்.

எவ்வளவு தூரம் செல்லலாம்

எவ்வளவு தூரம் செல்லலாம்

ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை

எடை

இந்த கார் 1185 கிலோ எடை கொண்டது.

சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

அரை மணி நேரத்தில் இந்த பேட்டரி 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.

சார்ஜ்

சார்ஜ்

டிசி மற்றும் ஏசி மின்சாரம் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

பொது தரிசனம்?

பொது தரிசனம்?

பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த கார் முதன்முறையாக வெளியுலக பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2013, 14:30 [IST]
English summary
While India got its first modern, next generation electric car in the form of Mahindra Reva e2o, over in Europe, VW showcased its first ever fully electric hatchback, E-Up! The vehicle was showcased at the Annual Press and Investors Conference in Wolfsburg.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+