டைகுன் மினி எஸ்யூவி உற்பத்திக்கு ஃபோக்ஸ்வேகன் க்ரீன் சிக்னல்!

புதிய டைகுன் மினி எஸ்யூவியின் உற்பத்திக்கு ஃபோக்ஸ்வேகன் பச்சைக் கொடி காட்டியுள்ளது. அப் ஹேட்ச்பேக் காரின் பிளாட்பார்மில் டைகுன் என்ற புதிய காம்பெக்ட் எஸ்யூவியை ஃபோக்ஸ்வேகன் வடிவமைத்துள்ளது. கடந்த ஆண்டு சாவ் பாவ்லோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய எஸ்யூவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதன் அடுத்த நிலை குறித்து ஆட்டோமொபைல் துறையில் ஆவலை ஏற்படுத்தியது. தற்போது இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்லும் பணிகள் முழுமையடைந்துவிட்டன. எனவே, டைகுன் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

 4 மீட்டர் எஸ்யூவி

4 மீட்டர் எஸ்யூவி

4 மீட்டர் நீளத்துக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காம்பெக்ட் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று ஃபோக்ஸ்வேகன் கருதுகிறது.

டிசைன்

டிசைன்

3.86 மீட்டர் நீளம், 1.73 மீ அகலம், 1.57 மீ உயரம் கொண்டதாக இருக்கும்.

அப் எஞ்சின்

அப் எஞ்சின்

அப் ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 60பிஎஸ் மற்றும் 75 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இந்த எஸ்யூவியிலும் பொருத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாற்றி பொருத்தப்படலாம். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் துணைபுரியும்.

 இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவுக்கு எப்போது?

2015ல் சர்வதேச பயணத்தை துவங்கும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி, 2016ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது. சர்வதேச அளவில் சுஸுகி ஜிம்னி, ஃபியட் பான்டா கார்களுக்கும், இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கும் போட்டியாக இருக்கும்.

விலை

விலை

இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கு தற்போது வரிச்சலுகை கிடைக்கிறது. ஆனால், இந்த கார் 2016ல்தான் விற்பனைக்கு வரும். அப்போதும் வரிச்சலுகை தொடர்ந்தால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் விலையில் விற்பனைக்கு வரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2013, 12:04 [IST]
English summary
News has appeared that an India specific Volkswagen Taigun compact SUV will enter production soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+