சன்ரைசர்ஸ் ஐபிஎல் அணிக்கு ஸ்பான்சர் வழங்கும் வால்வோ கார் நிறுவனம்!
சன்டிவி குழுமத்துக்கு சொந்தமான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் அணிக்கு வால்வோ கார் நிறுவனம் ஸ்பான்சராக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக கார் நிறுவனங்கள் தொடர்ந்து ஸ்பான்சராக இருப்பதில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், சன் ரைசர்ஸ் அணிக்கு தற்போது ஸ்பான்சர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஐடிசி ஓட்டலில் இதற்கான விழா நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் பங்கேற்றனர். சென்னை ஓபன் டென்னிஸ், கோல்ப் போட்டிகளுக்கு வால்வோ கார் நிறுவனம் ஸ்பான்சர் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








