ஏப்ரலில் அறிமுகமாகிறது வால்வோ வி40!

Volvo V40 Cross Country
வரும் ஏப்ரலில் வி40 கிராஸ் கன்ட்ரி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது வால்வோ. இந்த கார் வால்வோவின் என்ட்ரி லெவல் மாடலாக அறிமுகமாக இருக்கிறது.

இதனால், ஜெர்மனி தயாரிப்பு என்ட்ரி லெவல் சொகுசு கார்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். இந்த கார் முழுமையான தயாரிப்பு நிலையில் இறக்குமதி செய்யப்பட உள்ளது. வரும் மேமாதம் முதல் இந்த காரின் டெலிவிரி துவங்கப்படும் என வால்வோ நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வி40 காரை விட இந்த கார் 40 மிமீ கூடுதல் உயரம் கொண்டதாக இருக்கும். இந்த காரின் தோற்றத்தை கூட்டுவதற்காக பல்வேறு அம்சங்களுடன் டிசைன் செய்துள்ளது வால்வோ. ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வரும் இந்த காரில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்கும்.

எஞ்சின்

பெட்ரோல்:

டி3 வேரியண்ட்டில் 150 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினும், டி4 வேரியண்ட்டில் 180 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினும், டி5 டாப் வேரியண்ட்டில் 254 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.

டீசல்:

டி2 வேரியண்ட்டில் 115 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சினும், டி3 வேரியண்ட்டில் 150 பிஎ:்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினும், டி4 வேரியண்ட்டில் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினுடனும் வர இருக்கிறது. ரூ.25 லட்சத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 27, 2013, 11:32 [IST]
English summary
Sweden Luxury car maker Volvo is planning to launch New crossover SUV car in Indian market April this year to take on Audi Q3 and BMW X1. The new crossover car will be available in Petrol and Diesel engine options, reports says.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+