பாதசாரிகள், சைக்கிள் குறுக்கே வந்தால் இனி நோ டென்ஷன்
பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஆகியவை குறுக்கே வந்துவிட்டால் தானியங்கி முறையில் பிரேக் பிடித்து காரை நிறுத்தும் தொழில்நுட்பத்தை வால்வோ கண்டுபிடித்துள்ளது. இதே அடிப்படையில் முன்னர் வந்த தொழில்நுட்பங்களை விட இது மிகவும் மேம்பட்டது.
முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் அதிக விபத்துக்கள் குறையும் என வால்வோ நம்பிக்கை தெரிவிக்கிறது. ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பை வால்வோ வெளியிட்டது. புதிய தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் விளக்கப் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

முதன்முதலில்...
இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையை 2006ம் ஆண்டிலும், முழு தானியங்கி பிரேக் தொழில்நுட்பத்தை 2010ம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தியதாக வால்வோ தெரிவித்துள்ளது.

சைக்கிள் விபத்துக்கள்
ஐரோப்பாவில் சைக்கிள் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 50 சதவீதம் கார்களில் மோதுவதால் ஏற்படுவதாக வால்வோ சேகரித்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. புதிய தொழில்நுட்பம் மூலம் சைக்கிள்-கார் மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்துவிட முடியும் என வால்வோ தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பம்
காருக்கு முன்னால் திடீரென வரும் பாதசாரிகள் மற்றும் சைக்கிளை கண்டறிந்து டிரைவர் கட்டுப்பாடு இல்லாமலே தானியங்கி முறையில் இந்த தொழில்நுட்பம் காரை நிறுத்திவிடும்.

ரேடார்
பாதசாரிகள் மற்றும் சைக்கிளை கண்டறியும் வகையில் முகப்பு கிரில்லில் ரேடாரும், ரியர் வியூ மிரரின் பின்புறத்தில் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். ரேடார் பொருள் இருப்பதை கண்டறிந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்கும். அதனை ரியர் வியூ கேமராவில் இருக்கும் சென்சார்கள் மற்றும் கேமரா உணர்ந்து அதனை உறுதி செய்தபின் உடனடியாக தானியங்கி பிரேக் பிடித்து கார் நின்றுவிடும்.

கார், பைக்குகளுக்கும் பொருத்தலாம்
வால்வோ கார்கள் தவிர பிற நிறுவனங்களின் கார்கள் மற்றும் பைக்குகளில் பொருத்துவதற்கு ஏற்ற தகவமைப்புகளை இந்த தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

வால்வோவின் கூற்று
ஆட்டோமொபைல் உலகின் பிரத்யேக பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்குவதில் முன்னோடியாக எங்களை நிலைநிறுத்துவதற்கு இந்த புதிய தொழில்நுட்பமும் ஒரு சான்றாக இருக்கும் என வால்வோ தெரிவித்துள்ளது. விபத்தே இல்லாத பயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் கூறியிருக்கிறது வால்வோ.

கார்களில் எப்போது அறிமுகம்?
இந்த முழு தானியிங்கி பிரேக்கிங் தொழில்நுட்பம் வால்வோவின் வி40, எஸ்60, வி60, எக்ஸ்சி60, வி70, எக்ஸ்சி70 மற்றும் எஸ்80 கார்களில் பயன்படுத்தப்பட உள்ளது. வரும் மேமாதம் முதல் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் வால்வோ கார்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








