கண்கூச்சம் தராத கார் ஹெட்லைட்டை உருவாக்கிய வால்வோ
எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்களில் கூச்சம் ஏற்படுத்தாத புதிய ஹெட்லைட்டை வால்வோ ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்துகிறது.
இரவில் பயணம் செய்யும் போது எதிரில் வரும் வாகனங்களின் ஹெட்லைட் ஒளி கண்களுக்கு கூச்சத்தை தருகிறது. இதனால், சாலையை சரியாக பார்த்து ஓட்ட முடிவதில்லை.

இரவில் விபத்துக்கள் நடப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையில், கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்தாத புதிய ஹெட்லைட்டை வால்வோ உருவாக்கியிருக்கிறது.
இந்த ஹெட்லைட் எதிரில் வரும் வாகனங்களுக்கு துளிகூட கூச்சத்தை ஏற்படுத்தாது. மேலும், நீங்கள் ஒவ்வொரு முறையும் எதிரில் வரும் வாகனங்கள் வரும்போது ஹெட்லைட்டை டிம் டிப் செய்ய வேண்டியிருக்காது. ஹெட்லைட்டை ஆன் செய்துவிட்டு போய்க் கொண்டே இருக்கலாம்.
இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ஹெட்லைட் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வால்வோவின் எ60, வி60, எக்ஸ்சி60 ஆகிய கார்களில் இந்த புதிய ஹெட்லைட் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.
இதுதவிர, எதிர்காலத்தில் இருசக்கர வாகனங்களிலும் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ஹெட்லைட்டுகளை பொருத்துவதற்கான வாய்ப்பும் எழுந்துள்ளன. இதனால், இரவில் நடைபெறும் விபத்துக்கள் குறைய வாய்ப்பு ஏற்படும் என வால்வோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








