ஆவலைத் தூண்டும் கேம்பர் வேன்... நீங்களும் வாங்கலாம்!
இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கு அனைவருக்கும் விருப்பம்தான். ஆனால், நாம் மனதை விட்டு அகலாத அழகு கொட்டிக் கிடக்கும் இடங்களுக்கு செல்லும்போது அங்கு தங்குவதற்கு வசதி இருக்காது. ஹேட்ச்பேக், செடான் காரில் இதுபோன்ற இடங்களுக்கு சென்றாலும் கூட தங்குவது இயலாத காரியம். அப்படி இருந்தாலும், அதுபோன்ற பகுதிகளில் அறை எடுத்து தங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும்.
இதுபோன்ற பிரச்னைகள் மற்றும் செலவீனத்தை தவிர்ப்பதற்கு சொந்தமாக நடமாடும் வீடு இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. சரி, கேரவன்கள் எனும் நடமாடும் வீடுகளை வாங்கலாம் என்றாலும், அதனை கட்டி இழுத்துச் செல்ல வேண்டும். இதற்கு எரிபொருள் செலவு எக்கச்சக்கம் என்பதுடன், குறுகிய சாலைகளில் செல்வதும் கடினம்.
அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதால் அதெல்லாம் சினிமாக்காரர்களின் கைதான் தாங்கும் என்ற ஆதங்கப்படுவது உண்மை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கேம்பர் எனும் நடமாடும் வீடு கொண்ட வேனை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது. இது நம் நாட்டில் இல்லையென்றாலும், இதுபோன்ற நடமாடும் வீட்டை நாமும் சொந்தமாக கஸ்டமைஸ் செய்யலாம்.
என்ன, கொஞ்சம் ஐடியாவும் பணமும் இருந்தால் போதுமானது. பழைய மஹிந்திரா வாயேஜர் மற்றும் டாடா விங்கர் உள்ளிட்ட வாகனங்களில் இதுபோன்று கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். நம் கையில் இருக்கும் பணத்திற்கு தகுந்தாற்போல் வசதிகளுடன் குறைந்த செலவில் இதுபோன்ற வாகனங்களை கஸ்டமைஸ் செய்யலாம். ஃபோக்ஸ்வேகன் கேம்பர் வேனில் இருக்கும் வசதிகளை ஒரு ஐடியாவுக்காக ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

டபுள் பேக் வேன்
ஃபோக்ஸ்வேகனின் கேம்பர் வேன் விரிவுப்படுத்தி, உள்புறத்தில் இழுத்துக்கொள்ளும் வகையில் இரட்டை கேபினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஹெட்ரூம்
கூரையை மேலே தூக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால், உள்புறத்தில் அதிக ஹெட்ரூமுடன் விசாலமான அறை போன்று மாறிவிடும்.

வசதிகள்
நீண்ட தூர டிரிப் செல்வதற்கு ஏதுவான அனைத்து வசதிகளும் இந்த வேனில் இருக்கிறது. படுக்கையறை, சமையலறை, சிறிய ப்ரிட்ஜ், சோபா உள்ளிட்டவை இருக்கிறது

இடவசதி
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக டிரிப் சென்று வருவதற்கும், பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் ஏதுவான இடவசதியை கொண்டிருக்கிறது.

டபுள் பேக்கின் லே அவுட்
ஃபோக்ஸ்வேகன் கேம்பர் வேனின் உள்கட்டமைப்பின் விளக்க வரைபடம்.

கூடுதல் வசதி
சில இடங்களுக்கு செல்லும்போது கார் செல்ல முடியாத ஒற்றையடி பாதையாக இருக்கலாம். அதுபோன்ற இடங்களுக்கு சைக்கிளில் செல்ல ஏதுவாக கேம்பர் வேனில் 4 சைக்கிள்களை எடுத்துச் செல்லும் வகையில் இடவசதி இருக்கிறது.

உள்புறம்
ஒரு வீடு போன்று விசாலமாக காட்சியளிக்கும் உள்புறம்

கேம்பர் ஆசை பிறந்துவிட்டதா?
இதுபோன்று நீங்களும் சொந்தமாக ஒரு வேனை கஸ்டமைஸ் செய்ய விருப்பப்பட்டால் உங்களுக்கு ஏதுவான வாகனம் டாடா விங்கர்தான். டிசி உள்ளிட்ட நிறுவனங்களில் கஸ்டமைஸ் செய்ய அதிக செலவாகும். அதேவேளை, குறைந்த விலையிலும் இதுபோன்று கஸ்டமைஸ் செய்து வாங்க முடியும்.

மஹிந்திரா வாயேஜர்
டாடா விங்கரின் விலையை விட குறைவான விலையில் ஒரு வேனை வாங்கி செய்ய வேண்டுமெனில் செகன்ட் ஹேண்ட் மஹிந்திரா வாயேஜர் வேனை வாங்கி சில லட்சங்கள் செலவு செய்தால் இதுபோன்ற சூப்பர் கேம்பர் வேன் ரெடி. டிசி போன்ற நிறுவனங்களிடம் சென்றால் ரேட் அதிகம். ஆனால், குறைந்த விலையில் செய்து தரும் நிறுவனங்களும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications