ஒரே பிளாட்பார்மில் புதிய ஆடி, போர்ஷே, பென்ட்லீ, லம்போ எஸ்யூவிகள்!!

உலக அரங்கில் ஜாம்பவான் ஆட்டோ குழுமமாக திகழும் ஃபோக்ஸ்வேகன் தனது கீழ் செயல்படும் அனைத்து ஆடம்பர பிராண்டு எஸ்யூவி கார்களையும் ஒரே பிளாட்பார்மில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய எம்எல்பி என்ற புதிய பிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டு இந்த அடுத்த தலைமுறை எஸ்யூவி கார்கள் வடிவமைக்கப்பட உள்ளன. இவை அனைத்தும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களாக இருக்கும்.

ஆடி க்யூ 7

ஆடி க்யூ 7

அடுத்த தலைமுறை ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி ஃபோக்ஸ்வேகனின் எம்எல்பி பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்பட இருக்கிறது. தற்போதையை க்யூ7 மாடலைவிட குறைந்த எடை, சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும்.

போர்ஷே கேயென்

போர்ஷே கேயென்

ஃபோக்ஸ்வேகனின் கீழ் செயல்படும் போர்ஷே நிறுவனம் 2018 முதல் புதிய எம்எல்பி பிளாட்பார்மில்தான் கேயென் எஸ்யூவியை வடிவமைக்க உள்ளது.

லம்போ உரஸ்

லம்போ உரஸ்

போர்ஷேவைவிட அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட உரஸ் என்ற புதிய எஸ்யூவியை லம்போர்கினி வடிவமைத்து வருகிறது. 2017ல் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது.

பென்ட்லீ எஸ்யூவி

பென்ட்லீ எஸ்யூவி

எம்எல்பி பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட இருக்கும் எஸ்யூவி மாடல்களில் அதிக எடை கொண்ட மாடலாக பென்ட்லீயின் எஸ்யூவி இருக்கும். 2016ம் ஆண்டில் இது விற்பனைக்கு வர இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டூரக்

ஃபோக்ஸ்வேகன் டூரக்

பிற பிராண்டுகள் தவிர ஃபோக்ஸ்வேகனின் டூரக் எஸ்யூவியும் இந்த புதிய பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்பட உள்ளது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

இதுவரை ஸ்லைடுகளில் பார்த்த மாடல்களை தவிர 2016ல் அறிமுகம் செய்யப்பட உள்ள ஆடி க்யூ5 மற்றும் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் போர்ஷே மசான் ஆகிய எஸ்யூவி கார்களும் எம்எல்பி பிளாட்பார்மின் சற்று மாற்றப்பட்ட எம்க்யூபி பிளாட்பார்மில் டிசைன் செய்யப்பட உள்ளன.

நேரம், சிரமம் மிச்சம்

நேரம், சிரமம் மிச்சம்

ஒரே பிளாட்பார்மை கொண்டு பல எஸ்யூவி மாடல்கள் வடிவமைக்கப்பட இருப்பதால், நேரம் மற்றும் டிசைன் செலவீனம் மிகுதியாக கட்டுப்படுத்தப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen introduced the MLB platform last year to provide a common base for a range of large SUVs and crossovers from brands within its expansive group, which consists of Audi, Bentley, Porsche, Lamborghini etc,. a couple of which have brand new SUVs making their debut in a couple of years time.
Story first published: Monday, August 5, 2013, 9:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X