வென்ட்டோ வாங்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை திட்டம்
வென்ட்டோ காருக்கு ரூ.40,000 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ஃபோக்ஸ்வேகன் இலவசமாக வழங்குகிறது.
8 கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிறுவனங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்
1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு இந்த சிறப்பு ஆக்சஸெரீஸ் பேக்கை கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வென்ட்டோ டிஎஸ்ஐ பெட்ரோல் மாடலுக்கு இந்த சலுகை பொருந்தாது.

இலவச ஆக்சஸெரீஸ்
ரியர் வியூ கேமரா, நேவிகேஷன் சிஸ்டம், டிரங்க் ஆக்சென்ட் ஸ்பாய்லர், டோர் புரொடெக்டர், அலாய் வீல்கள் இந்த ஆக்சஸெரீஸ் பேக்கில் இடம்பெற்றுள்ளன.

இதர ஆக்சஸெரீஸ்
டோர் சில் பிளேட், மட் பிளாட், சீட் கவர்கள், விண்டோ குரோம் செட் ஆகியவற்றையும் ஃபோக்ஸ்வேகன் இந்த வென்ட்டோவுக்கு கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குகிறது.

எஞ்சின்
105 பிஎஸ் பவரையும், 153 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 105 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களிலும் கிடைக்கிறது. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








