2013 மாடல் வருகை: மாருதி வேகன்-ஆர் காருக்கு புக்கிங் நிறுத்தம்!
புதிய மாடல் வருகையையொட்டி வேகன்-ஆர் காருக்கான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மாருதி. கடந்த ஆண்டு நிலவரப்படி விற்பனையில் 4ம் இடத்தில் இருக்கும் கார் மாடல் வேகன்-ஆர். இதனை தக்கவைக்கவும், சந்தை போட்டியை சமாளிக்கவும் மேம்படுத்தப்பட்ட மாடலை விரைவில் அறிமுகம் செய்கிறது மாருதி.
ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரோ ஹைபிரிட் வேகன்-ஆர் காரை அறிமுகப்படுத்தவும் திட்டம் இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சிறிது மாறுதல்களுடன் வேகன்-ஆரை மேம்படுத்தி உடனடியாக விற்பனைக்கு கொண்டு வருகிறது. குரோம் பூச்சு கொண்ட புதிய முகப்பு கிரில், புதிய ஏர்டேம் மற்றும் ஹெட்லைட் டிசைனில் மாற்றம் என முகப்பு இன்னும் கவர்ச்சியாக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, பின்புற டிசைனில் மாற்றம் இருக்காது. டிவி விளம்பரத்தில் புதிய வரும் புதிய வேகன்-ஆரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2013 மாடல் வேகன்-ஆர்

2013 மாடல் வேகன்-ஆர்

2013 மாடல் வேகன்-ஆர்

2013 மாடல் வேகன்-ஆர்

2012 மாடல் வேகன்-ஆர்
முகப்பு ஒப்பீட்டுக்காக 2012 மாடல் வேகன்-ஆர் காரின் படம்.


Click it and Unblock the Notifications








