கார் எல்பிஜி, சிஎன்ஜி சிலிண்டர்களுக்கு வாரண்டி: மத்திய அரசு முடிவு

கார்களில் பொருத்தப்படும் எல்பிஜி, சிஎன்ஜி சிலிண்டர்களுக்கு கார் தயாரிப்பாளர்கள் தற்போது வாரண்டி வழங்குவதில்லை. கார் தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்தி தரும் சிலிண்டர்களும், வெளிச் சந்தையில் விற்பது போன்றே பாதுகாப்புக்கு உத்தரவாத இல்லாத நிலை இருக்கிறது.
இந்த நிலையில், கார்களில் பொருத்தப்படும் எல்பிஜி, சிஎன்ஜி சிலிண்டர்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அவசியம் வாரண்டி வழங்க வகை செய்யும் புதிய விதிமுறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அடுத்த 3 முதல் 4 மாதங்களில் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வர இருப்பதாக அந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், எல்பிஜி, சிஎன்ஜி சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், உத்தரவாதமும் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








