சென்னையில் இன்று முதல் சீட் பெல்ட் போடுறது கட்டாயம்... மறந்துடாதீங்க!

சென்னையில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் விதிமுறை மீறி வரும் கார் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் புதிய விதிமுறையை இந்த மாத துவக்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.

Seat Belt

மேலும், வாகன ஓட்டுனர்களுக்கு புதிய விதிமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு வாரம் கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் அணியாமல் வந்து முதல் முறையாக பிடிபடும் கார் ஓட்டுனர்களுக்கு ரூ.100 அபராதமும், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் பிடிபடும்போது ரூ.300 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமுறை வாடகை கார் ஓட்டுனர்களுக்கும், முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த சில நாட்களாக துண்டு பிரசுரங்கள் மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2013, 9:58 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+