இந்த 3 சொகுசு ஹேட்ச்பேக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?
நம் நாட்டு கார் மார்க்கெட் சிறிய கார்களை அடிப்படையாகக் கொணடிருப்பது அறிந்ததே. இங்கு விற்பனையாகும் 74 சதவீத கார்கள் சிறிய கார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சிறிய கார் ஜுரம் தற்போது சொகுசு கார் மார்க்கெட்டிலும் பற்றிக் கொண்டுவிட்டது. விற்பனையை அதிகரித்து புதிய வாடிக்கையாளர் வட்டத்தை உள்ளே கொண்டு வருவதற்காக குறைந்த விலை கொண்ட சொகுசு ஹேட்ச்பேக் கார்கள் அடுத்தடுத்து களமிறக்கப்பட்டு வருகிறது.
பென்ஸ் ஏ கிளாஸ் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அடுத்ததாக, பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் செப்டம்பரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், மார்க்கெட்டில் படுவேகமாக முன்னேறி வரும் ஆடி நிறுவனமும் புதிய ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி ஆடி ஏ1 கார் வந்தால், எது முன்னிலை பெறும் என்பதை யூகிப்பதற்காக சில தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் கொடுத்திருக்கிறோம்.

பென்ஸ் ஏ கிளாஸ் - எஞ்சின்
120 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 108 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும்.

ஏ கிளாஸ் டிரான்ஸ்மிஷன்
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

ஏ கிளாஸ் விலை
இந்த புதிய சொகுசு கார் ரூ.22.93 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமோக வரவேற்பு
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 10 நாட்களில் 400 முன்பதிவுகளை அள்ளியது பென்ஸ் ஏ கிளாஸ். இந்த நிலையில், அடுத்து வர இருக்கும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதால், ஏ கிளாஸை விட குறைவான விலையில் வரும் வாய்ப்பு இருக்கிறது.எனவே, ஏ கிளாஸை விட பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காருக்கு கூடுதல் வரவேற்பு இருக்குமென கருதப்படுகிறது.

டிசைன்
3 சீரிஸ் செடான் காரின் பிளாட்பார்மில்தான் இந்த காரும் வடிவமைக்கப்பட்டது. 4.2 மீட்டர் நீளம் கொண்டது.

எஞ்சின்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 2.0 லிட்டர் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

ரியர் வீல் டிரைவ்
இந்த பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

விலை
ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கு இடையிலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரலாம்.

ஆடி ஏ1 - டிசைன்
ஃபோக்ஸ்வேகன் போலோ எம்கே5 மற்றும் சீட் இபிஸா எம்கே4 அடிப்படையாகக் கொண்டது. மினி பிராண்டு மற்றும் ஆல்ஃபா ரோமியோ கார்களுக்கு போட்டியான டிசைன் கொண்டது. இளைய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த காரை ஆடி களமிறக்கியது.

5 டோர் மாடல்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 5 கதவுகள் கொண்ட ஸ்போர்ட்பேக் மாடல் கடந்த 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது.

எஞ்சின்
1.2 லி, 1.4 லி, 2.0லி பெட்ரோல் எஞ்சின்களுடனும், 1.6லி, 2.0லி டீசல் எஞ்சின்களுடன் மொத்தம் 7 விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்தியாவுக்கு வருமா?
இந்த சிறப்பான டிசைன் கொண்ட காரை உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும், பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 1 சீரீஸ் கார்களின் விற்பனையை பொறுத்து எதிர்காலத்தில் இந்த காரை இந்தியாவில் ஆடி அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

பிடித்தது எது?
இந்த 3 காரில் உங்களுக்கு பிடித்த கார் எது கருத்தை எழுதுங்கள்.


Click it and Unblock the Notifications








