காயலாங்கடை பஸ்சில் கண்ணாடி மாளிகை: இவங்க ஐடியா எப்பூடி!
மோட்டார் இல்லங்கள் எனப்படும் ஆடம்பர வசதிகள் நிறைந்த நடமாடும் வீடுகள் பலரின் கனவாக உள்ளது. ஆனால், அவற்றின் விலையை கேட்கும்போது அந்த ஆசை கோடீஸ்வர்களுக்கு சொந்தமானதாக மாறிவிடுகிறது.
இந்த நிலையில், கைவிடப்பட்ட காயலாங்கடை பஸ்சை கண்ணாடி மாளிகையாக உருவாக்கியுள்ளனர் இஸ்ரேலை சேர்ந்த சகோதரிகள். குறைந்த செலவில் அவர்கள் அசத்தலாக மாற்றியிருக்கும் அந்த வீட்டை படத்தில் காணலாம்.

இதுதாங்க அந்த பஸ்
அடுத்தடுத்த படங்களை பார்க்கும்போது இதுதானா அந்த பஸ் என்று வியக்க வைக்கப் போகிறது படத்தில் அனாதையாக நிற்கும் இந்த காயலாங்கடை பஸ். டேலி சால் மற்றும் ஹாகித் மோர்ஸ்கி ஆகிய இரண்டு பேரும்தான் இப்படி மாற்றியுள்ளனர்.

கஸ்டமைஸ்
பஸ்சை சொற்ப தொகை கொடுத்து வாங்கிய அவர்கள் வார்டு டிசைன் என்ற நிறுவனத்தின் உதவியை நாடினர். அந்த நிறுவனம்தான் இந்த பஸ்சின் அந்தஸ்தை மாற்றி காட்டியுள்ளது.

ஏசி வசதி
இந்த பஸ் குளிர்சாதன வசதி கொண்டது. வாட்டர் ஹீட்டர், டைனிங் டேபிள், வாஷ் பேஸின் உள்ளிட்ட வசதிகளுடன் மிக தாராளமான இடவசதியுடன் காட்சி தருகிறது.

குளியலறை
இந்த பஸ்சில் மிக சாதுரியமாக பொருட்கள் மற்றும் அறைகளை வடிவமைத்துள்ளனர் வார்டு டிசைனர் நிறுவனத்தின் பணியாளர்கள். கண்ணாடி கதவுகளுடன் காட்சி தரும் குளியலறை.

படுக்கை அறை
பஸ்சின் ஒருமுனையில் பெட்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. மிக விசாலமானதாக இருக்கிறது.

பாதுகாப்பு அறை
பாத்ரூமை ஒட்டிய பகுதியில் தடுப்புகளுடன் கூடிய பாதுகாப்பாக பொருட்களை வைப்பதற்கான அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நடிகை ஆட்ரி ஹெப்பர்னின் உருவத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.

மின்சாரம்...??
இந்த பஸ்சுக்கு மின்சார வசதி குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் பெறப்படுவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








