பாசத்தையும் குழைத்து மர வெஸ்பாவை உருவாக்கிய கார்பென்டர்!!
பழம் பெருமை வாய்ந்த வெஸ்பா ஸ்கூட்டர் டிசைனை மனதில் வைத்து பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை வடிவமைத்துள்ளன. அதேபோன்று, வெஸ்பா ஸ்கூட்டர்களின் மீதான காதலை வெளிப்படுத்துவதற்காக பல அவதாரங்களில் அவற்றை மாற்றிய ரசனையாளர்களும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கார்லோஸ் ஆல்பெர்டோ என்ற கார்பென்டர் மரத்திலான வெஸ்பா ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார். மிகுந்த கலைநயத்துடன் பல ஆண்டு கால முயற்சியில் இந்த ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார் கார்லோஸ். மர வெஸ்பா உருவான விதம், எஞ்சின் மற்றும் இதர தகவல்கள் அடங்கிய செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு துவக்கம்
2001ம் ஆண்டு இதுபோன்ற ஒரு இருசக்கர வாகன மாடலை வடிவமைக்க கார்லோசுக்கு எண்ணம் பிறந்துள்ளது. ஆனால், அதில் பல்வேறு தடங்கள்களையும், சவால்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

நண்பர் ஒத்துழைப்பு
ஒருவழியாக தனது எண்ணத்திற்கு உயிர்கொடுக்கும் விதமாக வெஸ்பா கிளப்பில் இருந்த நண்பர் ஒருவரின் ஒத்துழைப்புடன் இந்த ஸ்கூட்டர் வடிவமைப்பு திட்டத்தை கார்லோஸ் கையிலெடுத்தார்.

விபத்தால் தாமதம்
2004ம் ஆண்டு வெஸ்பா ஸ்கூட்டர் வடிவமைப்பை கார்லோஸ் துவங்கியுள்ளார். ஆனால், கார்லோஸ் ஒரு மோசமான விபத்தில் சிக்கியதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், உடல்நலம் தேறிய பின் 2007ல் தனது ஸ்கூட்டர் திட்டத்தை கையிலெடுத்துள்ளார்.

திட்டம் நிறைவு
கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த மர கடசல் ஸ்கூட்டர் வடிவமைப்பு பணிகள் நிறைவுபெற்றதாக கூறுகிறார் கார்லோஸ். தனது மனைவியும், மகளும் மிகுந்த உறுதுணைாயாக இருந்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கலை நயம்
ஸ்கூட்டரில் அணில் மீதான கோடுகள் போன்று வரிகள் தெரிகிறதல்லவா? - அவை அனைத்தும் விதவிமான மரங்களை கொண்டு வடித்துள்ளார் கார்லோஸ்.

உயர்தர மரங்கள்
ரோஸ்வுட், இபோனி, பீச், சாதின் வுட், ஜடோபா, டகுலா, எஃபி ஸெலியா, பாங்கா, ஸ்குபுரியா, சைகாமோர் ஆகிய பல்வேறு உயர்தர மரங்களை பயன்படுத்தி இந்த ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார் கார்லோஸ்.

சவால்கள்
இந்த ஸ்கூட்டருக்கு ஒரிஜினல் வெஸ்பா எஞ்சினை பொருத்துவதற்காக மர கடசல் பணிகளில் பல்வேறு சவால்கள் இருந்தன. இதேபோன்று, ஹேண்டில்பார் உள்ளிட்ட பாகங்களை வடிவமைப்பதிலும் சவால்கள் இருந்தன என்று தெரிவிக்கிறார் கார்லோஸ்.

எஞ்சின்
இந்த ஸ்கூட்டரில் 123.67 சிசி திறன் கொண்ட 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 5 எச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பிரேக்
முன்பக்கம், பின்பக்கத்தில் 126 மிமீ டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் டேங்க்
இந்த ஸ்கூட்டரில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. 107 கிலோ எடை கொண்டது.

மகள் பெயர்
இந்த ஸ்கூட்டருக்கு டேனியலா என்று தனது மகளின் பெயரையே சூட்டி அழகு பார்த்துள்ளார் கார்லோஸ். அவர் மகள்தான் இந்த ஸ்கூட்டரை அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








