சூரிய மின்சக்தியில் இயங்கும் உலகின் முதல் 'ஃபேமிலி' கார்!

4 பேர் செல்லும் வசதியுடன் சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் காரை நெதர்லாந்து நாட்டை ஐயின்தோவன் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுவரை சூரியசக்தியில் இயங்கும் கார்களில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், 4 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த காரை உலகின் முதல் குடும்பத்துக்கான சோலார் காராக அவர்கள் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் இந்த காரை பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்தனர். இந்த கார் குறித்து கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்டெல்லா

ஸ்டெல்லா

இந்த காருக்கு ஸ்டெல்லா என்று மாணவர்கள் பெயரிட்டுள்ளனர்.

உபரி மின் சேமிப்பு

உபரி மின் சேமிப்பு

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய மின் உற்பத்தி தகடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரம், பிரத்யேக மின் சேமிப்பு கலனில் சேமிக்கப்படுவதால், பிற கார்களை காட்டிலும் கூடுதல் மின்சாரம் சேமிக்கும் வசதி இருக்கிறது.

 ஏரோடைனமிக் டிசைன்

ஏரோடைனமிக் டிசைன்

இந்த கார் எதிர்கால ஏரோடைனமிக் டிசைன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவிங் சிஸ்டம்

டிரைவிங் சிஸ்டம்

எரிசக்தியை விரயமாகும் வகையில் அதிக வேகத்திலோ அல்லது குறைந்த வேகத்திலோ காரை செலுத்த முற்பட்டால் எச்சரிக்கும் வசதி உள்ளது.

டச்ஸ்கிரீன் சிஸ்டம்

டச்ஸ்கிரீன் சிஸ்டம்

இந்த காரில் பல்வேறு அப்ளிகேஷன்களை தொடுதிரை மூலம் இயக்கும் வசதி இருக்கிறது.

திட்டம்

திட்டம்

ஐன்தோவன் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த 22 மாணவர்கள் அடங்கிய குழு இந்த காரை ஓர் ஆண்டு முயற்சியில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

பயண தூரம்

பயண தூரம்

ஒரு முறை சூரிய மின்சக்தியிலிருந்து பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம் 600 கிமீ தூரம் வரை செல்லலாம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவாலுக்கு தயார்

சவாலுக்கு தயார்

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 6ந் தேதி முதல் 13ந் தேதி வரை நடைபெற இருக்கும் சோலார் கார்களுக்கான சவால் பந்தயத்தில் இந்த கார் கலந்து கொள்ள இருக்கிறது. மொத்தம் 3,000 கிமீ பந்தய தூரம் கொண்டது.

ஸ்டெல்லா சோலார் கார்
ஸ்டெல்லா சோலார் கார்
ஸ்டெல்லா சோலார் கார்
ஸ்டெல்லா சோலார் கார்
ஸ்டெல்லா சோலார் கார்
ஸ்டெல்லா சோலார் கார்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2013, 12:27 [IST]
English summary
The world's first solar-powered car that can tote around the whole family and produce electricity as well has been developed, Netherland students claim. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+