பெண்களுக்கு ஸ்கூட்டர் ஓட்டும் பயிற்சி: யமஹா வழங்குகிறது

யமஹா பீமேள் ரைடிங் டிரெயினிங் புரோகிராம் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் யமஹா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் மசாக்கி அசானோ, வர்த்தகப் பிரிவு தலைவர் ராய் குரியன், ரே ஸ்கூட்டர் விளம்பர தூதராக இருக்கும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய மசாக்கி அசானோ," ரே ஸ்கூட்டரின் ஸ்டைலான வடிவமைப்பு, அம்சங்கள் நகர்ப்புற இளம் பெண்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஸ்கூட்டர் வாங்குவதற்கு விரும்பும் பெண்களுக்கு போதிய பயிற்சி தரும் வகையில் இந்த புதிய டிரைவிங் பயிற்சி திட்டத்தை துவங்கியுள்ளோம்.
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், விற்பனை கூடங்களில் பெண் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் அதிக அளவில் பெண் பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம்.
இதேபோன்று, பல்வேறு திட்டங்களை ரே ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்காக துவங்க இருக்கிறோம்," என்றார்.
இந்த நிலையில், புதிய வெள்ளை நிற ரே ஸ்கூட்டரை யமஹா அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








